பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 3ア சீவலப்பேரி, மடத்துப்பட்டி என்ற ஊர்களில் இருந்து இரண்டு பேர் அடிக்கடி ராஜவல்லிபுரம் வந்து போவார்கள். அவர்கள், எல்லோராலும் எழுதிவிட முடியாது என்று எண்ணம் கொண்டிருந்தனர். எழுதுவதெல்லாம் லேசிலே வந்து விடாது. இப்ப எழுதுகிறபோது எல்லாமே நல்லா இருக்கிற மாதிரித்தான் தோணும். இப்ப எழுதினதை அப்படியே வைத்துவிட்டுச் சில மாதங்கள் சென்ற பிறகு எடுத்துப் படித்துப் பார்த்தால், இவை பிரயோசனமில்லை. சாரம் இல்லாதவை என்று நமக்கே தோன்றும் என்று சொல்வார்கள். 'சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பது மாதிரி எழுதி எழுதிப் பழகினால் எழுதுவதிலும் தேர்ச்சி பெற முடியும் என்று நான் நம்பினேன். எழுதிக் கொண்டேயிருந்தேன். அச்சமயத்தில் கவி தேசிக விநாயகம் பிள்ளையின் ஊன்றி உணர்தற்குரிய உண்மைகள் என்ற பாடல்கள் பத்திரிகையில் வெளிவந்தன. நான்கு பகுதிகளைக் கொண்ட அவற்றில், உள்ளம் தேறிச் செய்வினையில் ஊக்கம் பெருக உழைப்போமேல் பள்ளம் உயர் மேடாகாதோ பாறை பொடியாய்ப் போகாதோ? என்பதும் ஒன்று, இவ்வரிகள் என் உள்ளத்தில் ஆழப் பதிந்தன, உந்து சக்தியாக ஊக்கின. மந்திரம் போல் இவ் வரிகளை எந்நாளும் உச்சரிக்கலானேன். சுவாமி விவேகானந்தர் கூற்று ஒன்றும் என்னுள் சுடர்ப் பொறியாய்க் கனன்றது. எழு, விழி, இலட்சியசித்தி அடையும் வரை ஓய்ந்து நிற்காதே (அரைஸ், அவேக், ஸ்டாப் நாட் டில் தி கோல் இஸ் ரீச்ட்) நல்ல எழுத்தாளன் ஆகியே தீர்வேன் என உள்ளத்தில் உறுதி பூண்டேன். படிப்பதும் எழுதுவதுமே எனது வாழ்க்கை நியதிகள் ஆயின, 7 கிடைத்ததை எல்லாம் உற்சாகத்தோடு படித்தேன். படிப்பதற்கு நிறையவே கிடைத்தன எந்நாளுக் 1936 ஆம் வருட ஆனந்த விகடன் தீபாவளி மலர் சிறப்பான கதைகளைக் கொண்டிருந்தது. தினமணி 1935இலும் 1936இலும் பாரதி மலர்' என்று நீளவடிவத்தில் (தினமணி நாளிதழை இரண்டாக மடித்து அளவில் சிறப்பு மலர்கள் வெளியிட்டிருந்தது. ஒரு மலரில் புதுமைப்பித்தனின் சிறந்த கதைகளில் ஒன்றான புதிய கூண்டு இடம்பெற்றிருந்தது. மற்றும் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் நல்ல இலக்கிய விருந்தாக அமைந்திருந்தன.