பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 43 அங்குமிங்கும் ஒடும் அமைதியான அச் சூழலில் நடந்து செல்வது இனிய பொழுதுபோக்கு ஆள் நடமாட்டமே இராது. மணலில் யோகாசனம் செய்வதற்கும் வசதியாக இருந்தது. வேலையில் சேர்ந்து ஒரு மாதம் போனதும், முதல் சம்பளம் பத்தொன்பது ரூபாய் வரப்பெற்றதும் எனது மகிழ்ச்சி அதிகரித்தது. சாப்பாட்டுக்காக ஓட்டலுக்கு ஒன்பது ரூபாய் கொடுத்தேன். ஊருக்கு அம்மாவுக்கு ஐந்து ரூபாய் மணியார்டரில் அனுப்பினேன். மீதம் இருந்த ஐந்து ரூபாயை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன். அந்தச் சமயத்தில் தான் கல்கியின் கதைகள் தொகுக்கப்பெற்றுக் 'கணையாழியின் கனவு என்ற புத்தகமாக வெளி வந்திருந்தது. ஆனந்த விகடன் ஏஜண்டிடம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அவ்வூர் விகடன் ஏஜண்ட் யார் என விசாரித்ததில் அவரை சப்ரிஜிஸ்ட்ரார் ஆபீசில் பார்க்கலாம் என்றார்கள். அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த ஒருவரே பத்திரிகை விற்பனைப் பொறுப்பையும் ஏற்றுச் செயலாற்றினார் என்று தெரிந்தது. அவரைச் சந்தித்து, கணையாழியின் கனவு வாங்கினேன். மூன்று ரூபாய்க்குள் தான் இருந்தது அதன் விலை தொடர்ந்து வாரம் தோறும் விகடன் இதழ் கொண்டு தருவதற்கும் ஏற்பாடு செய்தேன். பின்னர், அவருக்கு விற்பனைக்கு வரும் பதிய புத்தகங்களில் ஒவ்வொரு பிரதியை வாங்கக் கூடிய வாடிக்கையாளராக அவர் என்னை ஆக்கிக்கொண்டார். ராயல் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் நித்தியானந்தம் அவரது இருப்பிடத்தை வேறு தெருவில் உள்ள ஒரு பெரிய கட்டிடத்துக்கு மாற்றினார். பல அறைகளையும் மாடியையும் கொண்ட விசாலமான இடம் தங்குவதற்கு மிக வசதியாக இருந்தது. எப்பவும் கலகலப்பாக இருக்கும். தட்டச்சு கற்க வருகிறவர்கள், மனுக்கள் முதலியன டைப் செய்து வாங்கிப்போக வருவோர், படித்துவிட்டு வேலையில்லாமல் சும்மா இருந்து வம்பளந்து பொழுது போக்கக் கூடும் வாலிபர்கள், என்னைத் தவிர மேலும் இரண்டு பேர் தங்குமிடமாகக் கொள்ளவும் வசதி இருந்தது அங்கே ஒருவர் பள்ளி ஆசிரியர். இன்னொருவர் பொதுப்பணித்துறை (P.W.D.) அலுவலகக் குமாஸ்தா, சந்தோஷமாகப் பேசிப் பொழுது போக்குவதற்காகப் பலதுறைகளைச் சேர்ந்த அன்பர்கள் சிலர் அங்கே கூடுவது வழக்கமாயிற்று. அண்டை அயல் கனவான்கள்- டாக்டர், வக்கீல் முதலிய பிரமுகர்கள் அந்த இடத்தைப் 'பிரமச்சாரிகள் குகை' (Bachelor’s Den) என்று குறிப்பிடும் தகுதியை அது பெற்றுவிட்டது. நான் கதை, 50@ణ5, கவிதைகள் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பிவந்தேன். விறுவிறுப்பான, உணர்ச்சி ஊட்டும், விஷயங்களைக்