பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைச் சுவடுகள் به கொண்ட பத்திரிகைகள் அநேகம் வந்து கொண்டிருந்தன. நவசக்தி, லோகசக்தி, பாரத சக்தி என்றெல்லாம் பெயர் கொண்டவை. அவை என் எழுத்துக்களை விரும்பி வரவேற்றன. அப்போதுதான் 1939இல் நான் வல்லிக்கண்ணன் என்ற புனைபெயரைச் சூட்டிக்கொண்டேன். பரமக்குடியில் இருந்த காலத்தில், டைப் ரைட்டிங் கற்றேன். லோயர்' பரீட்சை எழுதித் தேர்ந்தேன். இந்தி மொழியும் படித்தேன். 'மத்யமா தேர்வு' எழுதி வெற்றி பெற்றேன். இந்தி மொழிப் புத்தகங்களைப் படிக்க முடிந்தது. நல்ல நூல்கள் மிகுதியாகவே படிக்கக் கிடைத்தன. மறைமலை அடிகள் நூல்கள் பலவற்றை ஒரு நண்பர் படிக்கத் தந்தார். ஆங்கிலத்தில் கே.எஸ். வேங்கடரமணியின் நூல்கள் அநேகம் கிடைத்தன. பேப்பர் போட்ஸ்","ஆன் தி லேன்ட் ட்யூன்ஸ்', 'தி நெக்ஸ்ட் ரங் ஆஃப் தி லேடர் முதலிய நூல்களைப் படித்துப் பயனடைந்தேன். இக்காலகட்டத்தில் தான் ஆன்மீக நூல்களை அதிகம் படிக்க வாய்ப்பு கிட்டியது. இவ்வூரில் சுந்தரம் என்று ஒருவர் இருக்கிறார். நல்ல மனிதர், இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் பக்தி கொண்டவர். தனியாகச் சிறுவர் பள்ளி நடத்துகிறார் என்று கூறி, நண்பர் ஒருவர் என்னை அவரிடம் அழைத்துப் போய் அறிமுகம் செய்து வைத்தார். பிரமச்சாரியாக வாழ்ந்த சுந்தரம் ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு கொண்டிருந்தார். தியானம், பூஐை என்று பயின்று வந்தார். அவர் ஆன்மீக நூல்களை எனக்குப் படிக்கத் தந்தார். ராமகிருஷ்ண பரமஹம்சர் சுவாமி விவேகானந்தர், ரமண மகரிஷி, சுவாமி ராமதீர்த்தர் போன்ற ஞானிகளின் நூல்களும் பூரீராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையின் இதழ்களும் கிடைத்தன. தினந்தோறும் இரவு மணி முதல் 8 மணி வரை அவருடன் பேசிப் பொழுது போக்கினேன். கேதார்நாத், பத்ரிநாத் என்று யாத்திரை போய் வந்தவர் ஒருவர் சுந்தரத்தைப் பார்க்க வரும்போது தனது பயண அனுபவங்களைச் சுவையாகச் சொல்வது உண்டு. இப்படி பலவகைகளிலும் என் மனப்பதிவுகள் கனமும் ஆழமும் பெற்றுவந்தன. 1939 ஆரம்பத்தில் சென்னையிலிருந்து சக்திதாசன் சுப்பிரமணியன் பரமக்குடி வந்து என்னைச் சந்தித்தார். திருவி. கலியாணசுந்தரனார் வார இதழாக நடத்திவந்த நவசக்தியில் உதவி ஆசிரியராக அவர் பணிபுரிந்து கொண்டிருந்தார். அத்துடன், ம.கி, திருவேங்கடம் நடத்திய 'லோகசக்தி', 'பாரத சக்தி இதழ்களின் ஆசிரியர்குழுவிலும் இணைந்து செயலாற்றினார். அவ் இரண்டு பத்திரிகைகளின் விற்பனையை அதிகரிக்க -ஏஜண்டுகளிடமிருந்து பணம் வசூலிக்க-புதிதாக சந்தாக்கள் சேர்க்க எனும் நோக்கத்துடன் அவர் தமிழ்நாடு சுற்றுப் பிரயாணத்தில் ஈடுபட்டிருந்தார்.