பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வாழ்க்கைச் சுவடுகள் அதே பூநீவைகுண்டம் ஊரில் தங்கி வேலைபார்க்கும் வாய்ப்பு இப்போது கிட்டியது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப் பிடிக்காத ஒரு மனிதர் அங்கே இருந்தார். அவர் விவசாய ஆபீஸ் அதிகாரியாகவும் இருந்தார். அந்த அலுவலகத்தில் கிளார்க் ஆகப் பணிபுரிந்து கொண்டிருந்த உள்ளூர் இளைஞர் மனைவி. குழந்தை அம்மா, தம்பி என்று குடும்பத்தோடு சுக வாழ்வு வாழ்ந்துகொண்டிருந்தார். அவர் அப்படி இருந்தது. அதிகாரிக்குப் பிடிக்கவில்லை. அவருடைய வேலையில் அடிக்கடி குறைகண்டு, மேலிடத்துக்கு எழுதி அவருக்குத் தொல்லைகள் கொடுத்து வந்தார். இறுதியில் அவரைத் தொலைதூர இடமான பரமக்குடிக்கு மாற்றும்படி செய்துவிட்டார். அவருக்குப் பதிலாகத்தான் நான் பூநீவைகுண்டம் ஆபீசுக்கு மாற்றப்பட்டிருந்தேன். அந்த அதிகாரிக்கு இதே தான் தொழில் உவப்பான வேலை. தன் கீழ்ப் பணிபுரிகிறவர்களை அமைதியாக இருக்கவிடாது ஏதாவது தொல்லை கொடுத்துக் கொண்டேயிருப்பார். மேலே ரிப்போர்ட் பண்ணி, வேலையிலிருந்து 'இடைநீக்கம் செய்யும்படி பண்ணுவது அவருக்குப் பொழுதுபோக்கு ஒரே அடியாகச் சீட்டைக் கிழித்து வீட்டுக்குப் போகும்படி பண்ணிவிட்டால், அது மாபெரும் ஆனந்தக் களிப்பு அவருக்கு - இப்படி அவர் செய்த திருப்பணிகள் பற்றி, பரமக்குடிக்கு மாறுதலாகி வந்த நீவைகுண்டம் அன்பர் விவரித்திருந்தார். அதிகாரியின் இயல்பு அப்படித்தான் இருந்தது. நான் பத்திரிகைகளுக்குக் கதை கட்டுரை எழுதிக் கொண்டிருந்தது அதிகாரியை உறுத்தியது. அரசுப் பணியில் இருந்து கொண்டு இது போல் எல்லாம் எழுதக்கூடாது. அப்படி எழுதவேண்டுமானால் அவ்வாறு எழுதுகிற ஒவ்வொன்றையும் என்னிடம் காட்டி அனுமதி வாங்க வேண்டும், சில விஷயங்களை மேல் அதிகாரிக்கு அனுப்பி அனுமதி பெற வேண்டியிருக்கும் என்று அவர் என்னிடம் தெரிவித்தார். நான் எனது வழக்கப்படி எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். அது அவருக்குப் பிடிக்கவில்லை. சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்துக் கட்டுரைகள் எழுதுவதாக அவர் மேலிடத்துக்கு ரிப்போர்ட் செய்தார். விளக்கம்கேட்டு எழுதும்படி மேலேயிருந்து கடிதம் வந்தது. அலுவலகத்தில் வேலை மிகக் கொஞ்சம்தான். அதிகாரியின் தொல்லைதான் அதிகம் இருந்தது. ஆகவே எனக்கு அந்த உத்தியோகம் பிடிக்காமல் போயிற்று. நான் எழுத்துத் துறையில் வளர்ந்து முன்னேறவே விரும்பினேன். அதனால் வேலையை வேண்டாமென்று எழுதிக்