பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைச் சுவடுகள் 8يه சார்லஸ் டிக்கன்சின் இருநகரங்களின் கதை'யை மொழிபெயர்த்து 'தேய்ந்தகனவு என்றும், ஆர்.எல்.ஸ்டீவன்சன் எழுதிய 'டாக்டர் ஜெகில் அன்ட் மிஸ்டர் ஹைட் நாவலை 'இரட்டை மனிதன்' என்றும் புத்தகங்களாக்கியது அந்த நிறுவனம். புதியசீனா, மைக்கேல் காலினஸ்' போன்ற வரலாற்று நூல்களையும் பிரசுரித்தது. பின்னர் வியாபார நோக்கில், பல்வேறு விகிதங்களில் விலை வைத்து வகை வகையான புததகங்களை வெளியிட்டது. புதுமைப்பித்தன் எழுத்துக்கள் அதிகம் வந்தன. 29 சிறுகதைகள் கொண்ட புதுமைப்பித்தன் கதைகள்' மற்றும் ஆறு கதைகள் நாசகாரக்கும்பல்' 'பக்தகுசேலா-கலியுகமாடல் என்கிற சிறு வெளியீடுகள், உலகத்துச் சிறுகதைகள்' எனும் மொழிபெயர்ப்புக்கதைகள், சர்வாதிகாரி முசோலினியின் சரிதையான பாசிஸ்ட் ஜடாமுனி, ஹிட்லர் பற்றிய 'கட்சிப் தர்பார் ஆகியவை இந்தக் காலகட்டத்தில் பிரசுரம் பெற்றன. மற்றும் இந்தி மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப் பெற்ற பலவகை நூல்களும் கதை, நாடகம், கட்டுரை. நாவல்கள்) அழகு அழகாக வெளியிடப்பட்டன. இவை எல்லாம் ரீவைகுண்டத்தில் விலைக்குக் கிடைத்தன. 'மணிக்கொடி' இதழின் இறுதிக்கட்ட ஆசிரியரான ப. ரா. ப. ராமஸ்வாமி தான் நவயுகப் பிரசுராலயம் நிர்வாகியாகச் செயலாற்றிவந்தார். அவருடைய தம்பி ஒருவர் பூரீவைகுண்டத்தில் கதர்க்கடை வைத்திருந்தார். அவர் 'தினமணி நாளிதழின் விற்பனையாளர். நவயுகப் பிரசுரம் வெளியீடுகள் விற்பனைக்காக அவர் கடைக்கு வந்தன. அவற்றை நான் வாங்கிப் படித்தேன். நான் அவ்வூரில் வசித்த காலத்தில் வீரதீர சுவாரசிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. காசித்தேவன் என்கிற கொள்ளைக்காரன் அந்த வட்டாரத்தில் பிரபல ஹீரோ ஆக வளர்ந்து கொண்டிருந்தான். அவனைப்பற்றி ரசமான கதைகள் பரவி வந்தன. பத்தாவது வரை படித்த காசி, ஆங்கில வரலாற்றில் படித்தறிந்த ராபின் ஹஇட் எனும் கொள்ளைக்காரனை லட்சிய புருஷனாக மதித்தான். முன்னாட்களில், இங்கிலாந்தில் ராபின் ஹஇட் என்றொரு கொள்ளையன் இருந்தான். அவன் பணக்காரர்களைக் கொள்ளையடித்தான். சிரமப்படும் ஏழை எளியவர்களுக்குத் தாராளமாக உதவிபுரிந்தான். அதனால் பயங்கரவாதியாகக் கருதப்பட்ட அவன் பெரும்பாலோரால் கருணைவீரன், ஏழைப்பங்காளன் என்று போற்றப்பட்டான். அவனைப்பற்றிக் கவிதைகளும் கதைகளும் எழுதப்பட்டிருந்தன. அவனைப் போலவே தானும் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டான் காசி. அத்துடன், தென்மாவட்டங்களில், ஒரு காலத்தில் மிகவும் கீர்த்தி பெற்று விளங்கிய ஜம்புலிங்கம் என்ற கொள்ளைக்காரனும் காசிக்கு முன்னோடி வீரனாகத் திகழ்ந்தான். ஆகவே, அவன் காசித் தேவன்