பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 வாழ்க்கைச் சுவடுகள் கான்று, வடக்கு வாசலில் குழிதோண்டிப் புதைத்துவிட்டார்களாம். ன்றிலிருந்து அந்த வாசல் நிரந்தரமாக அடைக்கப்பட்டு விட்டது. கிழக்கு, மற்கு தெற்குக்கோட்டை வாசல்கள் மட்டுமே திறந்து வைக்கப்படும். இரவில் வை மூடப்பட்டு விடும். ெ ^

  • ,

32 بعي கோட்டைப் பிள்ளைமார் பெண்கள் தங்களுக்குள் உறவாடிக் கொள்வது தான் வெளி உலக ஆட்களையோ அழகுகளையோ அதிசயங்களையோ காணும் வாய்ப்பும் வசதியும் அவர்களுக்குக் கிடையா. வெளிஉலகப் பெண்கள் அபூர்வமாகக் கோட்டைக்குள் போய்வர அனுமதிக்கப்படுவார்கள். சின்னப் பையன்கள் கூட உள்ளே போகக் கூடாது. கோட்டைக்குள்ளேயே அம்மன் கோயில், பிள்ளையார் கோயில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. ஆத்திர அவசரத்துக்குத் தேவைப்படுகிற சாமான்களை வாங்கிக்கொள்ள வகைசெய்யும் சிறுசிறு கடைகளும் ஒருசில இருந்ததாகச் சொன்னார்கள். பெண்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள், அவர்கள் இயற்கையாக ஓடும். தண்ணீரை-ஆற்றையும் வாய்க்காலையும் பார்த்தது கிடையாது. குளம், கோயில், ரயில், பஸ், கடைவீதி போன்ற எதுவுமே அவர்கள் வாழ்நாளில் அவர்களுக்கு அறிமுகமானதில்லை. கல்வி அறிவு பெறுவதற்கான வசதியும் அவர்களுக்குச் செய்து தரப்பட்டதில்லை. 1980 வாக்கில் கோட்டைப் பிள்ளைமாரிடையே பங்காளித் தகராறு ஏற்பட்டது. ஒரு பிரமுகர் கொலை செய்யப்பட்டார். அவருக்கு நெருக்கமான சில குடும்பத்தினர் கோட்டையை விட்டு வெளியேறிப் பாளையங்கோட்டைக்கு வசிக்கப் போய்விட்டார்கள். அவர்களில் சிலர் வேலை தேடிக்கொண்டு வெவ்வேறு ஊர்களில் குடியேறினார்கள். கோட்டைக்குள்ளேயே தங்கியிருந்த குடும்பத்தினர் செழித்து வளரவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியின் போது, கோட்டையைப் பழுது பார்த்துப் பராமரிப்பதற்காக அரசு அந்த இனத்தாருக்கு ஒரு தொகை மானியம் அளித்து வந்தது. காலப் போக்கில் அச் சிறு தொகை பற்றாததால் கோட்டைச் சுவர்கள் சரிவரப் பராமரிக்கப்படவில்லை. மழை, புயல் முதலிய இயற்கை சக்திகளால் பாதிக்கப்பட்டுக் கோட்டைச் சுவரின் பகுதிகள் சிதைந்து கொண்டிருந்தது பளிச்செனப் புலனாயிற்று. காலத்துக்கு ஒத்து வராத முரண்பட்ட இந்த வாழ்க்கைமுறை நாளடைவில் தானாகவே சிதைந்து போயிற்று. கோட்டையினுள் எஞ்சியிருந்த சில ಅG-5,576 ஒவ்வொருவராக வெளியேறி எங்கெங்கோ வசிக்கப் போய்விட்டார்கள். கோட்டை கவனிப்பின்றி வெறிச்சிட்டுக் கிடக்கிறது என்பது பிற்காலத் தகவல்.