பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5: வாழ்க்கைச் சுவடுகள் மாடியில் வாரம் தோறும் கூடி பேசிப் பயின்றார்கள். அவர்களில் சிலர் என்னைத் தேடி வந்தார்கள். அவர்கள் சங்கத்தில் ஒரு கூட்டத்தில் பாரதியார் பற்றி நான் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அவ் வாலிபர்களில் தி.க.சிவசங்கரனும் ஒருவர். நானும் நெல்லை வாலிபர் சங்கம் கூட்டங்களுக்குப் போய் வந்தேன். அவர்களில் சிலருக்குத் தாங்களும் எழுத வேண்டும் என்ற தாகம் எழுந்திருந்தது திக சிவசங்கரனும் மற்றும் இரண்டு மூன்று பேரும் எழுத்து முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் வளர்ச்சிக்கு நான் துணை புரிய வேண்டும் என்று கோரி, என்னைச் சங்கத்தின் தலைவராக்கினார்கள். அவர்களுக்கு உதவும் நோக்கத்தோடு, 'இளந்தமிழன்' என்ற கையெழுத்துப் பத்திரிகையை ஆரம்பித்தேன். சில இதழ்களுக்கு அவர்களில் அநேகர் உற்சாகத்தோடு எழுதினார்கள். பிறகு சோர்ந்துபோனார்கள். தி.க.சி.மட்டும் தொடர்ந்து எழுதுவதில் ஆர்வம் காட்டி வந்தார். திருநெல்வேலியில் வேறொரு பகுதியில் மணிஅரசுக் கழகம்' என்ற அமைப்பை சில இளைஞர்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் 'மணிஅரசு' எனும் கையெழுத்து சஞ்சிகையைத் தயாரித்து வந்தார்கள். தொ.மு.சி. ரகுநாதன் அதன் பொறுப்பை ஏற்றிருந்தார். அவருடைய அறிமுகமும் எனக்குக் கிடைத்தது. 1941 டிசம்பரில் நெல்லை வாலிபர் சங்கம் ஆண்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தோம். சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளையைச் சிறப்புச் சொற்பொழிவாளராக அழைத்தோம். அவரும் மகிழ்ச்சியுடன் வந்து அருமையான சொல்விருந்து அளித்தார். ஆண்டு விழா அழைப்பின் முதல் பக்கத்தில் 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று பாரதிதாசன் வரிகளை அச்சிட்டிருந்தோம். கடைசிப் பக்கத்தில், பேச்செல்லாம் தமிழினிலே பேசுங்கள் ஏச்செல்லாம் தமிழினிலே ஏசுங்கள் என்று பொறித்திருந்தோம். அதைப் பார்த்துச் சேதுப்பிள்ளை மகிழ்ச்சி அடைந்தார். சொற்பொழிவில் அதைக் குறிப்பிட்டுப் பேசினார். இந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்களின் தமிழ்ப்பற்று பாராட்டப்பட வேண்டியது ஆகும். பேச்செல்லாம் தமிழினிலே பேசுங்கள் என்று கூறி நிறுத்திவிடாமல், ஏச்சுக்களைக் கூடத் தமிழிலே ஏகங்கள் என்று கேட்டுக்கொள்கிறார்கள். முன்பு ஒரு சிவனடியார் பாடினார், வைதாலும் தமிழினிலே வையுங்கள், வாழ்த்தெனக் கொண்டிடுவேன் என்று. அந்தப் பக்தரின் பண்பும் தமிழ்ப்பற்றும் இவர்களுக்கும் இருக்கிறது. இது சாதாரணமானது அல்ல என்றார். - தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவது பற்றிச் சேதுப்பிள்ளை கூறியது என் நினைவில் நன்கு பதிந்துள்ளது. அருவி எனும் அழகான சொல்