பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 53 இருக்கிறது. ஆனால், இப்போதெல்லாம் நீர்வீழ்ச்சி என்று எழுதுகிறார்கள். ஆங்கிலேயர் வாட்டர்ஃபால்ஸ் எனக் கூறுவதைப் பின்பற்றித் தமிழ் நாட்டினரும் அதன் மொழிபெயர்ப்பாக நீர்வீழ்ச்சி என்கிறார்கள். அழகான அருவியை ஒதுக்கிவிட்டு, நீர்வீழ்ச்சி என்று ஏன் அமங்கலமாகக் கூற வேண்டும் என்று அவர் கேட்டார். அதே போலக் காவிரி என்ற இனிய சொல், வழக்கத்தில் காவேரி என்று திரிந்துவிட்டது. பேச்சிலும் எழுத்திலும் அப்படியே வழங்கப்படுகிறது. காவேரி என்பது பொருளற்றது. காவிரி என்பது தோப்புகள் மரங்கள் அடர்ந்த கரைகளிடையே விரிந்து செல்லும் ஆற்றைக் குறிக்கும். காவேரி என்றால்? மழைநாட்களில் காவிரியில் செம்மண் நிறத்தில் நீர் ஓடும். அதில் குளித்துக் கரை ஏறுகிறவர்களின் வெள்ளைவேட்டி காவியேறி நிறம் மாறிக் காணப்படும். அதைக் குறிக்கத்தான் காவேறி என்று சொல்கிறார்கள் போலும் என்றும் சேதுப்பிள்ளை பேசினார். கடைவீதிகளில் உள்ள கடைகளின் பெயர்ப்பலகைகளில் எல்லாம் தமிழ்ப் பெயர்களை விட ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெயர்களே காணப்படுகின்றன. ஆங்கிலப் பெயர்கள் அழிக்கப்பட்டு அங்கே தமிழ்ச் சொற்கள் எழுதப்படவேண்டும். நெல்லை வாலிபர் சங்கத்தினர் இவ்விதம் திருத்தம் செய்வது, அழகான தமிழ்ச் சொற்களையே பயன்படுத்துவது முதலிய நற்பணிகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்லின் செல்வர் எடுத்துரைத்தார். - தமிழ்நாட்டில் உள்ளவர்களின் ஆங்கில மோகம் கால வேகத்தோடு சேர்ந்து வளர்ந்து வந்திருக்கிறதே தவிர குறைந்து விடவில்லை. இச் சந்தர்ப்பத்தில்தான், 'பாரதிதாசன் கவிதைகள் புதிய பதிப்பு வெளிவந்திருந்தது. நெல்லை வாலிடர்களுக்குப் பாரதிதாசன் கவிதைகள் பேரில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. - 'அல்லயன்ஸ் கம்பெனி தமிழ்நாட்டுச் சிறுகதைகள் என்ற வரிசையில், பெயர் பெற்ற எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுத்து தனித்தனிப் புத்தகமாக வெளியிட்டது. வ.வெ.சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரம்ராஜாஜி குட்டிக்கதைகள்'. த.நா. குமாரஸ்வாமியின் 'கன்யாகுமரி , கு.ப. ராஜகோபாலனின் கனகாம்பரம், ந. சிதம்பரசுப்ர மணியனின் 'சக்ரவாகம்' தி.ஜ. ரங்கநாதனின் 'சந்தனக்காவடி', தி. நா. சுப்பிரமணியனின் தோட்டியை மணந்த அரசகுமாரி' பி.எம். கண்ணனின் பவழமாலை கா.சி. வேங்கடரமணியின் ஜடாதரன் ஆகியவை தொடர்ச்சியாகப் பிரசுரம் பெற்றன. இவற்றுடன் பல எழுத்தாளர்களின் ஒவ்வொரு கதையைச் சேகரித்து, 'கதைக்கோவை' என்ற பெயரில் பெரிய புத்தகமாகவும் அந்த நிறுவனம் வெளியிட்டது. -