பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 55 ஆசனங்களில் அமரும்படி உபசரித்தார். நாங்கள் என்ன செய்கிறோம் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். தமிழின் சிறப்புப் பற்றியும். தமிழ்க் கவிதைகள், கம்பராமாயணம், முத்தொள்ளாயிரம் பற்றியும் எடுத்துச் சொன்னார். அப்போதுதான் வெளிவந்திருந்த இதயஒலி புத்தகத்தை எடுத்து அதில் உள்ள நயமான பகுதிகளை ரசமாக விவரித்தார். கவிதைகளைப் பாவத்தோடு வாசித்துக்காட்டினார். பள்ளிப் படிப்பு கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர்கள், அவர்களில் சிலர் எழுத்துக்கள் எல்லாம் டி.கே.சிக்குப் பிடிக்காது. அவை பற்றிக் கேலியாகவும் கண்டித்தும் அவர் பல இடங்களில் எழுதியுள்ளார். அன்று பேச்சிலும் அதே தொனியில் அவர் அழுத்தமாகக் கருத்துக்கள் தெரிவித்தார். அவர் ரொம்பப் பெரியவர். நாங்கள் சிறுவர்கள். எனக்கு அப்போது வயது 21 எனினும் தோற்றத்தில் ஒரு பையன் மாதிரித்தான் இருந்தேன். இரண்டு மூன்று வருடங்களாகத் தான் பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்தேன். தி.க.சிவசங்கரனும் வேல்ாயுதமும் கல்லூரி மாணவர்கள். இருப்பினும், டி.கே.சி எங்களைச் சமமானவர்கள் போல் மதித்து, அன்புடன் இயல்பாகப் பேசி மகிழ்ந்தார். அது அவருடைய பெரிய மனிதப் பண்பையும் பண்பாட்டையும் புலப்படுத்தியது. ஒரு மணிநேரத்துக்கும் அதிகமாகவே உரையாடல் நிகழ்ந்தது. பிறகு நாங்களாகவே விடைபெற்றுப் புறப்பட்டோம் எங்களுக்கு மிகுந்த மனநிறைவு தந்தது அந்தச் சந்திப்பு. அது மிக இனிய அனுபவமாக அமைந்தது. எழுதவேண்டும் என்ற ஆசை நெல்லை வாலிப சங்க உறுப்பினர்களுக்கு இருந்தது. ஆயினும் ஊக்கத்தோடு உழைக்கக்கூடிய மனமும் பொறுமையும் அவர்களுக்கு இல்லை. ஆரம்பத்தில் இளந்தமிழன்' இதழுக்கு ஏதாவது எழுதவேண்டும் என்று விரும்பி முயன்றார்கள். போகப் போக அவர்களுக்கு உற்சாகம் தேய்ந்து விட்டது. எழுதும் முயற்சியையே விட்டுவிட்டார்கள். தி.க. சிவசங்கரனும் தி.ப. திருஞானசம்பந்தம் என்ற மாணவரும் அவ்வப்போது எழுதித் தந்தார்கள். தி.க.சி நடைச்சித்திரம் பாணிக் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். கவிதையும் எழுதினார். 'நடைச்சித்திரம்' என்பது தமிழக்குப் புதிதாக வ.ரா. அறிமுகப்படுத்தியிருந்த இலக்கிய வடிவம். மணிக்கொடி சிறுகதைப் பத்திரிகையாக மாறுவதற்கு முன்னர், வார இதழாக வந்து கொண்டிருந்தது. அரசியல், சமூக சீர்திருத்த விஷயங்களோடு சிறுகதை இலக்கியக் கட்டுரைகளும் அதில் இடம் பெற்றன. அதில் நடைச்சித்திரம்' என்ற தலைப்பில் வரா. வாரம்தோறும் ஒரு கட்டுரை எழுதினார்.