பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைச் சுவடுகள் அன்றாட வாழ்க்கையில் காணப்படுகிற சாதாரண பாத்திரங்கள், அவர்களுடைய குணவிசித்திரங்கள் முதலியவற்றைச் சுவாரசியமாக விவரிப்பது நடைச்சித்திரம் ஆங்கிலத்தில் ஏ.ஜி. கார்டினர் என்பவர் லைஃப் ஸ்கெட்சஸ் என்று பல்வேறு குணச்சித்திரங்களை வர்ணித்து எழுதிய கட்டுரைகள் விசேஷ கவனிப்புப் பெற்றிருந்தன. அதே பாணியில் வ.ரா. தமிழில் எழுதினார். அங்காடிக்கூடை அலமேலு, மளிகைக்கடை மாணிக்கம், காவல் காத்தான் கான்ஸ்டபிள் கப்பையா என்று பல ரகமான சாதாரணர்களைப் பற்றிய வர்ணனைகள் அவை நடைச்சித்திரம்' என்ற பெயரில் பெரிய புத்தகமாக வெளி வந்திருந்தது. பல வருடங்களுக்குப் பிறகு அதன் மறுபதிப்பு வேறொரு பதிப்பகத்தாரால் வாழ்க்கைச் சித்திரம்' என்ற பெயருடன் பிரசுரிக்கப்பட்டது) வரா.வின் எழுத்துக்களால் தாக்கம் பெற்ற திக.சி, வண்டிக்கார வேலு. மாடு மேய்க்கும் கருப்பசாமி என்று சில கட்டுரைகள் எழுதினார். அப்புறம் அவர் அதைத் தொடரவில்லை. ஆகவே இளந்தமிழன் கையெழுத்துப் பத்திரிகையின் பக்கங்களை நிரப்ப வேண்டிய பொறுப்பும் என்னைச் சேர்ந்ததாயிற்று. நான் இதயஒலி' என்கிற எனது சொந்தப் பத்திரிகையுடன், வாலிபர்களுக்காக இளந்தமிழன் இதழையும் உருவாக்கி வந்தேன். ஒரு வருடம் முடிந்ததும் இளந்தமிழன் இதழுக்கு மூடுவிழா நடத்திவிட்டேன். என் எழுத்துக்களை விரும்பி ஏற்றுப் பிரசுரிப்பதற்குப் பல பத்திரிகைகள் இருந்தன. சென்னையில் இருந்து வெளிவந்த நவசக்தி' 'பாரதசக்தி, கோயம்புத்துரிலிருந்து வந்து கொண்டிருந்த சினிமா உலகம் மாதம் இருமுறை புதுக்கோட்டையிலிருந்து வந்த திருமக்ள் அணிகலம்' என்னும் மாத இதழ்கள். திருச்சியிருந்து வந்த மறுமலர்ச்சி இலக்கிய இதழ் 'கலாமோகினி முதலியன. எல்லாம் தரமான சிற்றிதழ்களாகவே விளங்கின. ஆனால், எந்த இதழும் எழுத்தாளருக்குச் சன்மானம் தரக்கூடிய நிலையில் இருந்ததில்லை. - முதன்முதலாக எழுத்து மூலம் எனக்குச் சன்மானம் என்று கிடைத்தது ஆனந்த விகடன் பத்திரிகையில் இருந்து புன்னகையும் புதுநிலவும் என்ற எனது கதையை வெளியிட்டுப் பதின்மூன்று ரூபாய் எட்டனா சன்மானம் வழங்கியது அது. கதை மூலம் அடுத்து நான் பெற்ற வருமானம் 'இந்திரா என்ற மாதப் பத்திரிகையிலிருந்து காரைக்குடியில் இருந்து வெளிவந்த இந்திரா ஒரு சிறுகதைப் போட்டி நடத்தியது. அதில் என் கதை தெருக்கூத்து முதல் பரிசு பெற்றது. தெருவில் கழைக்கூத்து விளையாட்டுகள் ஆடிக்காட்டி கிடைக்கிற காககளைக் கொண்டு வாழ்க்கை நடத்திய ஒரு ஏழைக் குடும்பத்தைப் பற்றிய