பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ {} வாழ்க்கைச் சுவடுகள் ஆயினும் என் உள்ளத்தில் அமைதி இல்லை. வளர்ந்து முன்னேறுவதற்கு வீட்டை விட்டு வெளியேறி ஏதாவது பத்திரிகையில் சேர்ந்து உழைக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் உறுத்திக் கொண்டிருந்தது. வெளிஉலகில் சென்று முயற்சிக்க வேண்டும் எனும் நினைப்பு பேருரு எடுத்து வந்தது. எங்கே போவது? என்ன செய்வது? இப் பிரச்சினைகள் தலைதூக்கவில்லை. வீட்டைவிட்டு வெளியேறி ஏதாவது செய்தாக வேண்டும். எங்கே போவது?. சென்னைக்கே போகலாம். போவதற்குப் பணம்?. நடந்தே போகலாம் - இப்படி மனம் தர்க்கித்துக் கொண்டிருந்தது. புத்தகங்களில் படித்திருந்த சில வரலாற்று நிகழ்வுகள் என்னுள் வேலை செய்தன. பெயர் பெற்ற ஆங்கில நாவலாசிரியன் எழுத்தாளன்-கவிஞன் ஆலிவர் கோல்ட்ஸ்மித் நடந்து நடந்தே ஐரோப்பா முழுவதும் பயணம் செய்தான். ரஷ்ய எழுத்தாளன் மாக்சிம் கார்க்கி நடந்து நடந்தே ரஷ்யாவின் நீள அகலங்களைக் கண்டறிந்தான். இத்தாலிய சர்வாதிகாரியாக வளர்ந்துவிட்ட பெனிட்டோ முசோலினி, பையில் மூன்றே மூன்று (இத்தாலியக் காசுகளோடு, தொலைவில் இருந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு நடந்தே ரோம் நகரை அடைந்தான். நடப்பது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை என்றது மனம் தனக்குச் சாதகமாக மனம் கணக்கிட்டது. திருநெல்வேலியில் இருந்து சென்னை 400 மைல் தூரம் தினசரி 30 மைல்கள் நடக்கலாம். அப்படி நடந்தால் 14 நாட்களில் சென்னை போய்ச் சேரலாம். எப்படியும் 15 நாட்களில் போய்விடலாம் என்று சந்தோஷப்பட்டது. தொடர்ந்து தினசரி 30 மைல்கள் நடக்கமுடியுமா? கையில் பணம் எதுவுமின்றி நடக்கிறபோது சாப்பாட்டுக்கு என்ன செய்வது? போதுமான உணவு இன்றி எத்தனை மைல்கள் நடக்க முடியும்? எத்தனை நாட்கள் நடக்கமுடியும்? இக் கேள்விகளை மனசே கேட்டுக்கொண்டது. ஆனால், இளமையும் கனவு வெறியும் கூடி அதெல்லாம் நடந்து போயிடலாம் என்று தைரியம் தந்தன. என்றைக்குப் போவது? என்னென்ன எடுத்துப் போக? வீட்டில் யாருக்கும் தெரியாமல், எப்படிக் கிளம்பிப் போவது? இதை வைத்தே தறியடித்துப் பொழுது போக்கியது மனம் ஒருவாறு எல்லாம் தீர்மானிக்கப்பட்டது. ஒருநாள் அதிகாலையில் எழுந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிவிட வேண்டும். ஒரு பையில் இரண்டு வேட்டி, இரண்டு சட்டை, இரண்டு துண்டு. எஸ்.எஸ்.எல்.சி.சர்டிபிகேட் புத்தகம், சில தாள்கள். பேனா- இவற்றை எடுத்து