பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் §§ வைத்து, பையை மறைவாக ஓர் இடத்தில் பத்திரப் படுத்தினேன். எனது எண்ணங்களையும் நோக்கத்தையும் விரிவாக எழுதி, நான் வீட்டை விட்டுப் போகிறேன். தேட வேண்டாம் என்று முடித்து ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். புறப்படுவதற்கு முன்னதாக அதை அடிக்கடி திறந்து பார்க்கப்படுகிற ஒரு பெட்டியில் பார்வையில் படும்படியாக வைத்தேன். 1942 மே மாதம் 24ஆம் நாள. இரவு வந்தது. சரியான தூக்கமில்லை. எப்படிப் புறப்பட்டுப் போவது என்ற நினைப்பில் மனம் குழம்பிக் கொண்டிருந்தது. ஐந்து மணிக்குக் கிளம்பிவிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் அதிகாலையில் துங்கிவிட்டேன். திடீரென விழித்த போது மணி ஆறு ஆகியிருந்தது. நல்ல வெளிச்சம் வந்திருந்தது. மற்றவர்கள் விழித்திருக்கவில்லை. அம்மா மட்டும் எழுந்து வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தாள். கதவைத் திறந்து கொண்டு வெளியேறினேன். நான் வாய்க்காலுக்குப் போவதாக அம்மா எண்ணியிருக்கலாம். நான் தெருவில் இறங்கி வேகமாக நடந்தேன். அண்ணாவோ தம்பியோ எழுந்து வந்துவிடக்கூடாது என்ற பதைப்பு அவசரமாக நடந்தேன். திருநெல்வேலி ஜங்ஷன் சேர்ந்து, மதுரை ரோடில் நடந்தேன். அப்போது அந்தப்பகுதி எல்லாம் அமைதியும், போக்குவரத்து நெரிசல் இன்மையும், ஓங்கி வளர்ந்த மருதமரங்கள் நின்ற சூழலுமாக இருந்தன. காலப்போக்கில் அனைத்தும் முற்றிலும் மாறிவிட்டன. பஸ் போக்குவரத்தும் அதிகம் இருந்ததில்லை. நான் நிதானமாக நடந்தேன். வீட்டிலிருந்து பணம் எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. கொஞ்சம் அவல் மட்டும் எடுத்துச் சிறு பொட்டலமாகப் பைக்குள் வைத்திருந்தேன். வழிநெடுகப் பசுமையாக இருந்தது. அடிக்கடி மழைபெய்து ரோடு ஓரங்களில் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. பள்ளங்களில் தெளிவாகக் கிடந்த தண்ணீரை அவ்வப் போது குடித்துக்கொண்டு நடந்தேன். எப்பவாவது சிறிதளவு அவலை எடுத்து வாயில் போட்டு மென்றவாறு நடந்தேன். எந்த இடத்திலும் உட்காரவில்லை. மாலை 6 மணி அளவிற்குக் கோவில் பட்டி வந்துவிட்டேன். 35 மைல் தூரம் நடந்திருந்தேன். அன்று தேதி மே25. ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் உட்கார்ந்தேன். படுத்தால் சுகமாக இருக்கும் என்று தோன்றியது. கட்டிடத்தின் ஒருமூலையில், கல் தரையில், படுத்தேன். ஆழ்ந்த தூக்கம் என்னை ஆட்கொண்டது. - விழிப்பு வந்தபோது விடிவின் வெளிச்சம் வந்திருந்தது. எழுந்து நடக்கலானேன். ரோடு ஒரம் ஒரு குளம். தண்ணீர் பெருகிக்கிடந்தது. காலைக்