பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{?? வாழ்க்கைச் சுவடுகள் கடமைகளை முடிக்க வசதியாக இருந்தது. பல்துலக்கி சிறிது அவலை மென்று தண்ணீர் குடித்து விட்டு நடக்கலானேன். வெறிச்சோடிய ரஸ்தா அபூர்வமாக எப்போதாவது ஒரு பஸ் அல்லது கார் வரும். ஏதேனும் ஊர் நெருங்கும்போது ஒன்றிரண்டு ஆட்கள் مسمية தென்படுவார்கள், ஊர்களும் ஆள் அரவமற்று அமைதியாகவே காட்சி தரும். யார் எங்கே டோகிறாய் என்று எவரும் கேட்டதில்லை. நான் மெதுமெதுவாக நடந்தேன். மாலை வந்தது. விருதுநகரை எட்டிவிட்டேன். ஊருக்கு முன்னாடி ரஸ்தா ஒரத்தில் ஒரு தோட்டமும் அதில் சிறு மடம் அல்லது சத்திரம் போன்ற ஒரு கட்டிடமும் தென்பட்டன. எங்கும் ஆள் நடமாட்டமே இல்லை. இந்தத் திண்ணையில் சிறிது நேரம் படுத்து ஓய்வெடுக்கலாமே என்று தோன்றியது. படுத்தேன். உடனேயே துங்கிப் போனேன். திடீரென விழிப்பு வந்தது. நல்ல இருட்டு இரவில் நேரம் என்ன இருக்கும் என்று தெரியவில்லை. இருப்பினும் எழுந்து நடந்தேன். விருதுநகர் சேர்ந்தேன். நகரம் விழிப்புடன் இருந்தது. கடைகள் திறந்திருந்தன. வண்டிகளும் ஆட்களும் இயங்கிக் கொண்டிருந்தனர். பெரும்பாலான கடைகளில் மின்விளக்குகள் இல்லை. கனத்த பித்தளைச் சங்கிலிகள் தொங்க, அவற்றில் பெரிய பித்தளை விளக்குகள், எண்ணெயில் பிரகாசமாய் எரியும் திரிகள். ஒரு கடையில் சுவரில் காட்சி தந்த பெரிய கடியாரம் மணி 12 என்று சுட்டியது. தெருக்குழாய்களில் குடிதண்ணீர் வந்து கொண்டிருந்தது. முகம் கழுவி, வாய் கொப்புளித்து வேண்டிய மட்டும் தண்ணீர் குடித்தேன். நடந்தேன். நகரின் ஒளிப்புள்ளிகள் மங்கி மறைந்தன. இருள் கவிந்த ரஸ்தா. வானத்து நட்சத்திரங்கள் தான் துணை வந்தன! கள்ளிக்குடி ஊர் வந்தது. அங்கு விடிந்தால் சந்தை கூடும் என்று தோன்றியது. கூண்டு வண்டிகள் வந்து சரக்குகளோடு அவிழ்க்கப்பட்டு நின்றன. மாடுகள் வண்டிகளருகில் நின்று தீவனம் தின்றுகொண்டிருந்தன. ஆட்கள் நின்றும், உட்கார்ந்தும், படுத்தும் பலநிலைகளில் காட்சி தந்தார்கள். சிறுசிறு கடைகள் வெளிச்சமிட்டவாறு இருந்தன. நானும் இங்குச் சிறிது நேரம் படுக்கலாம் என்ற நினைப்பு வந்தது. சற்று தள்ளிப் போய் வண்டிகளோ ஆட்களோ இல்லாத இடத்தில் படுத்தேன். தூக்கம்தான். திடீரென்று யாரோ எழுப்புவதற்குக் குரல் கொடுத்ததை உணர்ந்து விழித்தேன். எழுந்து உட்கார்ந்து பார்த்தால் சுற்றி நெடுகிலும் கட்டை வண்டிகளும் கூண்டு வண்டிகளும் மாடுகளும் ஆட்களும் மொய்த்திருப்பது