பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 65 பேசிக்கொண்டார்கள். ஒவ்வொரு மாதமும் பணம் பற்றாக்குறை ஏற்படுவதையும், எதிர்பாராத செலவுகள் வந்து சேருவதையும் கூறி மனசுக்கு ஆறுதல் தேடிக் கொண்டார்கள். கோபாலுக்கு எதிர்பாராத செலவுக்கு வழிசெய்பவனாக நான் வந்துள்ளதை எண்ணிச் சிறிது வருத்தப்பட்டேன். மறுநாள் காலையில் விழித்தெழுந்து, அங்கேயே கிணற்றில் குளித்தேன். சாப்பிட் இட்டிலி கிடைத்தது. இன்று நீ ஊருக்குப் போறியா? எவ்வளவு ரூபாய் வேண்டும்?' என்று கோபால் கேட்டார். மூன்று ரூபாய் போதும் என்றேன். அதை அவர் தந்தார். அவரிடம் விடைபெற்றுக் கிளம்பினேன். அப்போது யுத்த காலம் ரயில் வண்டிகள் குறைவாகவே ஓடின. காரைக்குடி போவதற்கான ரயிலின் நேரத்தை முந்திய தினம் கவனித்திருந்தேன். மதுரை ஜங்ஷன் நிலையத்துக்குப் போகாமல், நடந்து அடுத்த ஸ்டேஷன் போய்க் காத்திருந்தேன். அங்கே பயணிகள் மூன்று-நான்கு பேர்தான் இருந்தார்கள். ரயில்வண்டி வந்ததும் வசதியாக ஏறிச் சவுகரியமாகப் பயணம் செய்தேன். காரைக்குடி சேரும்போது இரவாகிவிட்டது. ஊருக்குள்டோய் இருட்டில் 'இந்திரா அலுவலகத்தைத் தேடிக்கண்டு பிடிப்பது சிரமம் அவ்வேளையில் ஆபீசில் யார் இருக்கப் போகிறார்கள் என்று எண்ணி, இரவை ரயில் நிலையத்திலேயே போக்கினேன். அதிகாலையில் எழுந்து ஊருக்குள் சென்று 'இந்திரா அலுவலகத்தைக் கண்டுபிடித்தேன். இரவில் யாரோ அங்கே தங்கியிருந்திருக்கிறார்கள். அவ்வேளையில் இரண்டு பேர் எழுந்து நின்றார்கள். நான் சிறிது நேரம் வெளியே சுற்றிவிட்டு மெதுவாக அந்த அலுவலகத்துக்குப் போனேன். இந்திரா மாத இதழின் வெளியீட்டாளர், உரிமையாளர் பழனியப்ப செட்டியார் என்று ஒருவர். ப. நீலகண்டன் ஆசிரியப் பொறுப்பில் இருந்தார். பிற்காலத்தில் நாடக ஆசிரியராகப் பெயர் பெற்று. சினிமா உலகில் பிரவேசித்து திரைப்பட இயக்குநராகப் புகழ்பெற்ற அதே நீலகண்டன்தான். கோ.த. சண்முகசுந்தரம் உதவிஆசிரியர். - - பத்திரிகை விற்பனை வளர்ச்சியை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் தென்னாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த கோ.த.ச. திருநெல்வேலிக்கு வந்த போது ஒரு நாள் எங்கள் வீட்டுக்கும் வந்தார். இந்திரா சிறுகதைப் போட்டியில் என் கதை முதல் பரிசு பெற்றிருந்த சமயம் அது. நன்கு பேசிப் பழகினார். நான் அலுவலகம் அடைந்த சமயம், ப. நீலகண்டன் இருந்தார். கோ.த.ச. இல்லை. வேறு ஒருவரும் அங்கே காணப்பட்டார்.