பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ĝĝ வாழ்க்கைச் சுவடுகள் ப.நீயிடம் நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். எனது பயணநோக்கத்தையும் தெரிவித்தேன். என் பேச்சில் ஆர்வம் காட்டிய மற்றொருவர் பரிவுடன் விசாரித்தார். அவர் தான் எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம், கோயம்புத்தூரில் இருந்து இங்கு வந்துள்ளார் என்று நீலகண்டன் அறிமுகம் செய்தார் 'மணிக்கொடி'யில் சிறுகதைகள் எழுதிக் கவனிப்புப் பெற்றிருந்தவர் ஆர். சண்முகசுந்தரம் அவரை நாவல் எழுதும்படி கு.ப. ராஜகோபாலன் தூண்டியதன் பேரில், அவர் நாகம்மா' என்ற நாவலை எழுதியிருந்தார். அதைப் புத்தகமாக வெளியிடுவது பற்றிப் பேசி ஏற்பாடு செய்வதற்காக, சக்தி வை. கோவிந்தனைச் சந்திக்க அவர் காரைக்குடி வந்திருந்தார். இரவில் 'இந்திரா ஆபீசிலேயே தங்கியிருந்தார். இத் தகவல்களைச் சண்முகசுந்தரம் தெரிவித்தார். இந்திராவில் என்னைச் சேர்த்துக் கொள்ளத் தற்போது வசதியில்லை. கோத சண்முக சுந்தரமும், வீரவநல்லூர் அன்பர் ஒருவரும் பணிபுரிகிறார்கள். வேண்டுமானால், சக்தி கோவிந்தனிடம் சொல்லிப் பார்க்கலாம் என்று பநீ கூறினார். நான் அழைத்துப் போய் வை.கோ.விடம் சொல்கிறேன் என்று சண்முகசுந்தரம் தாமாகவே உதவ முன்வந்தார். முதலில் குளிப்பு வேலையை முடித்துக் கொள்ளலாம் பக்கத்தில் ஒரு தோட்டமும் கிணறும் இருக்கிறது. குளிக்க- துணி தோய்க்க வசதியான இடம் என்று அவர் கூறி, என்னையும் கூட்டிப் போனார். அவர் எளிமையாக இருந்தார். புதியவனான என்னிடம் இயல்பாக அன்புடனும் பரிவுடனும் பேசிப் பழகினார். வேட்டி சட்டைகளுக்குச் சோப்புப் போட்டு அங்கேயே உலரவைத்தார். சவுகரியமாகக் குளித்தோம். உலர்ந்த உடுப்புகளை அணிந்து கொண்டு 'இந்திரா அலுவலகம் வந்தோம். அதற்குள் கோ.த.ச. வந்திருந்தார். நேமத்தான்பட்டி என்ற பக்கத்து ஊரில் வசித்த பழனியப்ப செட்டியாரும், 'இந்திராவில் பணிபுரிந்த வீரவநல்லூர் அன்பரும் வந்து சேர்ந்தார்கள். 'என்ன வீட்டிலே சொல்லாமல் கொள்ளாமல் வந்து விட்டீர்களா? உங்க அண்ணன் கடிதம் எழுதியிருக்கிறார் என்றார் கோ.த.ச. நான் வீட்டைவிட்டுக் கிளம்பியதும், வெகுநேரம் வரை வீடு திரும்பாததால் அம்மாவும் சகோதரர்களும் கவலைப்பட்டனர். நான் எழுதி வைத்த கடிதத்தை அவர்கள் ரொம்ப தாமதமாகத்தான் பார்த்துள்ளனர். அண்ணா கோமதி நாயகம் தேடல் முயற்சிகளில் ஈடுபட்டார். சில பத்திரிகை அலுவலகங்களுக்குக் கடிதம் எழுதினார். காரைக் குடி