பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்னன் 给7 கோ.த.சண்முகசுந்தரத்துக்கும் சென்னை சக்திதாசனுக்கும் எழுதி விசாரித்திருந்தார். தம்பி அங்கே வந்தால் உதவிபுரியுங்கள்: அவன் சென்னைக்குப் போவதானால் போகட்டும். ஆனால் நடந்து போக வேண்டாம். எனக்கு எழுதினால் தேவையான பணம் அனுப்பிவைப்பேன். அவன் திருநெல்வேலிக்கே திரும்புவதானாலும் திரும்பி வரட்டும்' என்று அண்ணா கோ.த.சக்கு எழுதியிருந்தார். அவர் அந்தக் கடிதத்தை என்னிடம் காட்டினார். நீங்கள் இங்கே வந்திருப்பதாக உங்கள் அண்ணனுக்குக் கடிதம் எழுதி விடுகிறேன். நீங்களும் எழுதுங்கள் என்றார். ஆர். சண்முகசுந்தரம் என்னை சக்தி காரியாலயத்துக்கு அழைத்துப் போனார். யுத்தகாலத்தைக் கருதி, தற்காலிகமாக சக்தி காரைக்குடிக்கு இடம் பெயர்ந்திருந்தது. சிறிய இடம் தான். வை.கோ. இருந்தார். துணை ஆசிரியர் தி.ஜ. ரங்கநாத தி.ஜர னும் இருந்தார். இருவரிடமும் என்னை அறிமுகம் செய்து எனது தேவையைத் தெரியப்படுத்தினர் சண்முகசுந்தரம், தி.ஜர. எனது எழுத்தைப் பாராட்டினார். சக்தி மாத இதழிலும் என் கதைகள் பிரசுரம் பெற்றிருந்தன. 'சக்தியில் இப்போது ஆள் தேவையில்லை. பொதுவாக இப்போது எந்தப் பத்திரிகையிலும் புதிதாக யாரையும் வேலைக்கு எடுத்துக்கொள்ள மாட்டார்கள். யுத்த கால நெருக்கடி பத்திரிகைகளின் விற்பனையும் பாதிக்கப்பட்டிருக்கு நீங்கள் திருநெல்வேலிக்குப் போய், அங்கிருந்தபடியே பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதி அனுப்புவதுதான் நல்லது என்று தி.ஜர. நல்லுரை கூறினார். 'சக்தி' விற்பனைப் பிரிவில் சுப. நாராயணன் நிர்வாகியாக இருந்தார். அவரையும் சந்தித்துப் பேசினேன். அவரும் எனது எழுத்தை வெகுவாகப் பாராட்டி எனக்கு மகிழ்ச்சி ஊட்டினார். மீண்டும் இந்திரா அலுவலகம் சேர்ந்தோம். நீலகண்டனிடம் சண்முகசுந்தரம் நிலைமையை விவரித்தார். தி.ஜர சொல்வதுதான் சரி. நீங்கள் திருநெல்வேலி திரும்பி வீட்டில் இருந்து எழுதிக் கொண்டிருப்பது தான் நல்லது என்று நீலகண்டனும் ஆலோசனை கூறினார். - வீரவநல்லூர் அன்பர் - அவர் பெயர் சுந்தரம் என் மீது அனுதாபமும் அக்கறையும் கொண்டார். பிரியமாகப் பேசினார். அவர் நேமத்தான்பட்டியில் அம்மாவோடு வசித்தார். அவர் வீட்டுக்குப் பக்கத்திலேயே திருந்ெல்வேலி நண்பர்கள் இரண்டுபேர்- அவர்களுக்கும் சொந்த ஊர் வீரவநல்லூர்தான். வீதி, சொக்கலிங்கம், வீதி, நடராசன்- நேமத்தான்பட்டியில் பள்ளி