பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் #9 நல்ல முறையில் மறுமலர்ச்சி இலக்கிய இதழ் ஒன்று நடத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு வாழ்ந்த அவர், கல்லூரிப் படிப்பை நிறைவு செய்யாது விட்டு விட்டு. 'கலாமோகினி என்ற மாதம் இருமுறையைத் திருச்சியில் ஆரம்பித்தார். தாம் இலக்கிய உலகில் ஒரு புதிய சகாப்தம் படைக்கப்போவதான எண்ணம் அவருக்கு இருந்தது. அதனால் 'சாலிவாகனன்' என்றும் 'விக்ரமாதித்தன்' என்றும் தமக்குப் புனைபெயர்கள் வைத்துக் கொண்டார். மணிக்கொடி எழுத்தாளர்களான ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், சிட்டி’ பெ.கோ. சுந்தரராஜன், எம்.வி. வெங்கட்ராம் ஆகியோரின் துணையும் பேராதரவும் அவருக்குக் கிடைத்தன. கலாமோகினி நல்ல தரமான இலக்கிய ஏடு ஆக வளர்ந்தது. அதன் முதல் இதழிலிருந்து இதழ் தோறும் அட்டையில் ஓர் எழுத்தாளர் படத்தை வெளியிட்டு உள்ளே இவர் நமது அதிதி என்று அவரைப் பற்றி ஒரு பக்கம் எழுதுவதை விரா.ரா. வழக்கமாகக் கொண்டிருந்தார். இது கடைசி இதழ் வரை நீடித்தது. சாலிவாகனன் சிறப்பாகக் கவிதைகள் எழுதக் கூடியவர். விக்ரமாதித்தன் என்ற பெயரில் சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதினார். விறுவிறுப்பாகவும், கிண்டலாகவும், சூடாகவும் விமர்சனங்களை அவர் எழுதி வந்தார். கலாமோகினியில் என் சிறுகதைகளும் கட்டுரைகளும் வந்துகொண்டிருந்தன. சேலத்தில் வேல்சாமி கவிராயர் என்பவர் 'சண்டமாருதம்' என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். அவர் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதுவார். திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுத முற்பட்டிருந்த கவிஞர் பாரதிதாசனுடன் அவருக்குப் பழக்கமிருந்தது. எனவே, இதழ்தோறும் பாரதிதாசன் புதிதாக எழுதிய கவிதை வெளிவந்தது. எனது எழுத்துக்களும் சண்டமாருதத்தில் வந்து கொண்டிருந்தன. அயல்நாட்டிலிருந்து தமிழகம் வந்து சேர்ந்திருந்த சிபா. ஆதித்தன் 'பார்-அட்-லா (ஆதித்தனார் என்று குறிப்பிடும் வழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டது தமிழ் ராஜ்யம் பற்றிய கனவு வளர்த்தார். அதற்காகத் தமிழ் ராஜ்யக் கட்சி தொடங்கினார். கட்சியை வளர்ப்பதற்குப் பத்திரிகைகள் தேவை என்று தமிழன்' வாரப் பத்திரிகையை ஆரம்பித்தார். தொடர்ந்து தினத்தந்தி தொடங்கினார். தமிழன் இதழ் புதுமைகள் பண்ணுவதில் மிகுந்த உற்சாகம் காட்டியது. இதழின் அட்டையில் சினிமா நடிகையர், அல்லது புகழ்பெற்ற அழகியர், பிரபலஸ்தர்கள் படங்களை வெளியிடவில்லை. சமூகத்தில் கலந்துள்ள சாதாரண பெண்மணிகளைப் படம்பிடித்து அட்டைச்சித்திரமாக்கினார்கள்.