பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைச் சுவடுகள்

  • 掌2

நான் போனபோது இரவு ஆரம்பித்திருந்தது. ராஜகோபாலனின் தம்பி ரா. சந்தானம் தான் அறையில் இருந்தார். நான் என்னை அறிமுகம் செய்து ாண்டதும், மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்றார். பையை இங்கே வத்துவிட்டு வாங்க முதலில் ஒட்டலுக்குப் போய், காபி சாப்பிடுவோம். தெல்லாம் அப்புறம்தான் என்றார். அவர் என்னைப் போலவே ஒல்லியாய், பன் போன்ற தோற்றமே கொண்டிருந்தார். ஒட்டல் வெகு அருகிலேயே இருந்தது கலாமோகினி ஆபீசுக்கு ருகிறவர்களுக்கெல்லாம் இங்கதான் காப்பி சாப்பாடு' என்று கூறினார். அங்குச் சிற்றுண்டியும் காப்பியும் சாப்பிட்டோம். o; موسم. 3. 鲨 ெ . పళ శ్లో

pبلغاباني

•, ميمي

K $$ அறைக்கு வந்து பல விஷயங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். நான் இதயஒலி கையெழுத்துப் பத்திரிகையில் ஆண்டு மலர் தயாரித்திருந்தேன். பெரிய அளவில் அதிகப் பக்கங்கள் நிறையச் சித்திரங்களோடு பலரகமான கதைகள், கட்டுரைகள், கவிதைகள், ஓரங்க நாடகங்கள். எல்லாம் நானே எழுதியவை. சந்தானம் அதைப் பார்த்து அதிசயித்தார். கையெழுத்துப் பத்திரிகைன்னாலும் பிரமாதமா இருக்கு. இது வரை நான் கையெழுத்துப் பத்திரிகை எதையும் பார்த்ததில்லை. இப்பதான் முதன்முதலாகப் பார்க்கிறேன். கையெழுத்திலும் இப்படி பத்திரிகை உருவாக்கமுடியும் என்பது வியப்பாகத்தான் இருக்கு என்று புகழ் பாடினார். அப்போது விரா.ரா. வந்து சேர்ந்தார். தம்பி சந்தானம் அவரிடம் என்னைப் பற்றிக் கூறினார். 'காப்பி சாப்பிட்டாச்சா? என்று பிரியத்தோடு விசாரித்தார் ராஜகோபாலன் கலா மோகினி எழுத்தாளர்கள், ந.பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், வ.ரா. க.நா.சு. முற்றும் பல எழுத்தாளர்கள் பற்றிப் பேசி மகிழ்ந்தோம். கலாமோகினியை மேலும் சிறப்பாகக் கொண்டு வருவது பற்றி அவர் விவரித்தார். அப்புறம் நீங்க இங்கே எங்கு வந்தீங்க?' என்று விசாரித்தார். நான் என் எண்ணத்தைச் சொன்னேன். இரவு இங்குத் தங்கிவிட்டு, காலையில் முதல் பஸ்சில் சேலம் போகலாம்னு நினைக்கிறேன். அங்கே சண்டமாருதம் பத்திரிகையில் சேர முடியுமா என்று பார்க்கனும். வி.ரா.ரா. என்னையே கூர்ந்து நோக்கினார். வேல்சாமி கவியை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். ‘தெரியாது 'சண்ட மாருதத்துக்கு வரும்படி அவர் எப்பவாவது உங்களுக்குக் கடிதம் எழுதினாரா?