பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ア3 இல்லை. நானாகத்தான் போய் முயற்சி பண்ணலாமே என்று' .سபுறப்பட்டேன். - 'இப்படி வேலை தேடி பத்திரிகை பத்திரிகையாகப் போவது சரியில்லை. உங்கள் மதிப்பை நீங்களே குறைத்துக்கொள்கிற செயல் தான் அது நீங்க சேலம் போக வேண்டாம் திருநெல்வேலிக்கே திரும்பிப் போங்க வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் நான் என்னாலான உதவிகளைச் செய்வேன்' என்று உறுதியாகச் சொன்னார் வி.ரா.ரா. ஆகவே மறுநாள் காலையில் நான் மீண்டும் திருநெல்வேலிக்கே பிரயாணம் செய்தேன். 12 விரா ராஜகோபாலன் வாக்களித்தட்டி உதவிபுரிந்தார் டிசம்பர் மாதம் அவரிடமிருந்து கடிதம் வந்தது. - புதுக் கோட்டையில் இருந்து வெளிவரும் திருமகள் உங்களுக்குத் தெரிந்த பத்திரிகைதான். அதன் வெளியீட்டாளரான ரா.சி. சிதம்பரம் என்னைக் கண்டு யோசனைகள் பெற வந்திருந்தார். திருமகளை மணிக்கொடி வழியில் தரமான மறுமலர்ச்சி இலக்கிய இதழாக வளர்க்க அவர் விரும்புகிறார். அதற்குத் தனக்குத் துணைபுரியக்கூடிய ஒருவரைச் சிபார்சு செய்யும்படி என்னைக் கேட்டார். நான் உங்கள் பெயரைக் கூறினேன். அவருக்கும் திருப்திதான். அவர் உங்களுக்குக் கடிதம் எழுதுவார். நீங்கள் தயங்காமல் புதுக்கோட்டை போய் திருமகள் பணியை ஏற்றுக்கொள்ளலாம். உங்களுக்குத் தேவையான வசதிகளை எல்லாம் ரா.சி. சிதம்பரம் செய்து தருவார். அவர் கடிதம் கிடைத்த உடனேயே புறப்பட்டுவிடுங்கள். இரண்டு நாட்களில் ரா.சி. சிதம்பரம் கடிதமும் வந்தது. ஆகவே நான் 1943 ஜனவரியில் புதுக்கோட்டை போய்ச் சேர்ந்தேன். நான் முதலில் அந்தப் பாதையில் ரயிலில் சென்றது 1942 மே மாதம். அவ்வருடம் ஆகஸ்டில் வெள்ளையனே வெளியேறு (Quit india) என்ற முழக்கத்துடன் இந்திய விடுதலைப் போராட்டம் தீவிர நிலையை எட்டியது. நாடு நெடுகிலும் கிளர்ச்சிகள், தந்திக் கம்பங்களை முறித்தல், ரயில் நிலையங்களுக்குத் தீ வைத்தல் போன்ற ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. தமிழ்நாட்டிலும் அக்கிளர்ச்சி பரவலாக நடைபெற்றது. தேவகோட்டைப் பகுதியில் ரொம்ப மும்முரமாக இருந்தது. காரைக்குடிக்கு அருகில் உள்ள பள்ளத்துர் ரயில் நிலையம் தீயிட்டுப் பொசுக்கப்பெற்று முற்றிலும் சிதைக்கப்பட்டது. இச் செய்திகளை நான் பத்திரிகைகளில் படித்து அறிந்ததுதான். அரசியல் விஷயங்களில் நான் ஆர்வம் கொண்டதில்லை. மே மாதம்