பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7ళ్లీ வாழ்க்கைச் சுவடுகள் சென்றபோது பசுமையாய் முழுமையாய்க் காட்சி தந்த சில இடங்கள், ஜனவரியில் பார்க்கையில் கருகிச் சிதைந்து காணப்பட்டன. அழகான சூழ்நிலையில் அமைதியாக நின்ற சிறிய கட்டிடம் பள்ளத்தூர் ரயில் நிலையம் இப்போது கருகிச் சரிந்த கூரையும், இடிந்து தகர்ந்த சுவர்களுமாய்க் கண்களை உறுத்தியது. தேவையில்லாமலே அது என் மனசில் நிலையாகப் பதிவாகிவிட்டது. புதுக்கோட்டையில் ராசி சிதம்பரம் மகிழ்ச்சியோடு என்னை வரவேற்றார். செல்வந்தர் வீட்டு இளைஞர் என்பது அவரது நடை உடை பாவனைகளில் புலப்பட்டது. தனவைசிய இளைஞர்கள் பத்திரிகைப் பிரசுரத்திலும் புத்தக வெளியீட்டிலும் ஆர்வம் காட்டத் தொடங்கியிருந்த காலம் ரா.சி. சிதம்பரமும் கனவுகள் வைத்திருந்தார். திருமகளைச் சிறப்பான இதழாக வளர்க்க வேண்டும். இராம. மருதப்பர் இப்போது ஆசிரியராக இருக்கிறார். சாதாரணமானவர். அவரும் இருக்கட்டும். நீங்கள் உங்கள் றமையை எல்லாம் காட்டித் திருமகளை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செலுத்த வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். 'இந்த மாடியிலேயே தங்கிக் கொள்ளலாம். சாப்பாட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஒட்டலில் ஏற்பாடு செய்கிறேன்' என்றும் அவர் சொன்னார். எல்லாம் வசதியாகத்தான் இருந்தது. திருமகள் இருந்த இடம் கீழராஜ வீதியில் விசாலமான ஒரு மாடி. மேஜைகள் நாற்காலி பெஞ்சுகள் ஏராளமாகவே கிடந்தன. அலமாரிகள் போன்றவற்றுக்கும் குறைவில்லை. மறுநாள் இராம. மருதப்பர் வந்தார். பள்ளி ஆசிரியர் போல் தென்பட்டார். என்னை நானே அறிமுகம் செய்து கொண்டேன். எனது எழுத்துக்களைப் பெரிதும் பாராட்டினார். சரி. இருங்க' என்றார். பத்திரிகை சம்பந்தமான பல அலுவல்களை அவர் எனக்குக் கற்றுத் தந்தார். முக்கியமாக, அச்சுக் கோத்து வந்த பிரதிகளைத் திருத்தும் முறையைச் (புரூஃப் பார்ப்பதை) சொல்லிப் புரிய வைத்தார். மாலை நேரங்களில் அமைதியான இடங்களில் -ಖ76ು அழைத்துச் சென்றார். பல விஷயங்கள் பற்றிப் பேசினார். 'செட்டியாருக்கு ஆசை அதிகமிருக்கு அதெல்லாம் நடைமுறையில் எவ்வளவு சாத்தியம் என்பது போகப் போகத் தான் தெரியும்' என்றும் சொல்லி வைத்தார். விரைவிலேயே எனக்கு அது புரிவதற்குச் சந்தர்ப்பம் உதவியது. நான் அங்கு வந்து சேர்ந்து பத்து நாட்கள் ஆகியிருந்தன. ஒருநாள் இரவு ஏழு மணி இருக்கும். ராசிசிதம்பரம் வந்தார். 'என்னைத்தேடி யாராவது வந்தார்களா?' என்று கேட்டார். யாரும் வரவில்லை என்றேன். பொதுவான விஷயங்களைப் பேசியவாறு நின்றார். சற்று நேரத்தில் வெளியே நின்று யாரோ