பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைச் சுவடுகள் நிலைமை சிரமம் என்று தான் தெரிகிறது. கூடியவரை | г. - - -- • ? * சமாளியுங்கள். வேறவாய்ப்பு ஏதாவது கிட்டுமா என்று பாாககலாம எனறு { வாய்ப்பு சில தினங்களிலேயே தேடி வந்தது. 'சமயம் வருகிறபோது நானே உங்களை, சினிமா உலகத்துக்கு அழைத்துக்கொள்வேன்' என்று முன்னர் உறுதி கூறியிருந்த ஆசிரியர் பி.எஸ். செட்டியார் எனக்குத் திருநெல்வேலிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதை என் அண்ணா புதுக்கோட்டைக்கு அனுப்பிவைத்தார். சினிமா உலகம் பணிகளில் எனக்கு உதவியாக இருந்த ஜீவன் என்ற நண்பர் விலகிக்கொண்டார். நீங்கள் உடனே புறப்பட்டு வந்தால் சினிமா உலகத்துக்கு உதவியாக இருக்கும் என்று அதன் ஆசிரியர் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை நான் மருதப்பரிடம் காட்டினேன். 'நீங்கள் இதை ஏற்றுக் கொள்வதுதான் நல்லது. இங்குள்ள நிலைமைகள் உங்களுக்கே தெரியும். திருமகள் பிப்ரவரி இதழ் எப்ப தயாராகி வெளிவரும் என்றே தெரியவில்லை. ஒவ்வொரு மாதமும் இதே சிரமம் தான் நீடிக்கும். அதனாலே நீங்கள் பி.எஸ். செட்டியார் அழைப்பை ஏற்றுக் கோயம்புத்துர் போங்கள்' என்று யோசனை கூறினார். அது தான் சரி என்று எனக்கும்பட்டது. ஆகவே ரா.சி. சிதம்பரத்திடம், பி.எஸ். செட்டியர் கடிதத்தைக் காட்டி நான் கோயம்புத்தூர் போகிறேன் என்று சொன்னேன். போகப் போகிறீர்களா? என்று வருத்தத்துடன் கேட்டார் அவர் 'இப்ப கொஞ்சம் சிரமம் தான். இன்னும் சில மாதங்களில் நிலைமை சரிப்பட்டுவிடும். திருமகளை நல்ல முறையில் கொண்டுவரலாம். இப்ப நீங்க கோவைக்குப் போவதும் நல்லதுதான். நிலைமைகள் சரிப்பட்டதும் நான் உங்களை அழைத்துக் கொள்கிறேன்' என்றார். செலவுக்குப் பணம் தந்து வழி அனுப்பிவைத்தார். நல்ல மனிதர் தான். ஆயினும் அவர் கனவுகள் நிறை வேற வழி பிறக்கவில்லை. ஒரு மாதம் கழித்து திருமகள் பிப்ரவரி இதழ் வந்தது. அதன் பிறகு ஓரிரு இதழ்களே பிரசுரம் பெற்றன. மருதப்பர் கதர்க்கடையில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார் என்ற தகவல் என்குக் கிடைத்தது.

  1. 3

புதுக்கோட்டையின் திருமகள் அலுவலகத்தில் ஒரு மாதமும் சில நாட்களும் போக்கிய பிறகு பிப்ரவரி இறுதியில் நான் கோயம்புத்துர் போட்ச் சேர்ந்தேன். .