பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 வாழ்க்கைச் சுவடுகள் பி.எஸ். செட்டியாரின் உதவிகளைக் கோரியவர்கள் சினிமா உலகம் பத்திரிகையின் வளர்ச்சிக்கு ஒத்துழைத்திருந்தனர். திரைப்பட வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற இளங்கோவன் (ம.க.தணிகாசலம் ஒரு சமயம் சினிமா உலகம் இதழுக்காக உழைத்திருந்தார். கவி சதுசு யோகியார் (சது. கப்ரமணியயோகி சிறிது காலம் அதற்குச் சிறப்புச் சேர்த்திருந்தார். கவி பாரதிதாசனும் சினிமா உலகத்துக்காக ஒரு கட்டத்தில் உழைத்துள்ளார். இதனால் எல்லாம் சினிமா உலகம் தனி மதிப்பும் ஒரு தரமும் பெற்று வளர்ந்திருந்தது. வெகு காலம் சென்னையிலேயே வளர்ந்த அது யுத்த கால நெருக்கடி காரணமாகக் கோயம்புத்துருக்கு மாற்றப்பட்டிருந்தது. கோவை அந்நாட்களில், சென்னைக்கு அடுத்த முக்கிய சினிமாத் தயாரிப்புக் கேந்திரமாக விளங்கியது. அங்குப் பல ஸ்டுடியோக்களும், படத் தயாரிப்பு நிறுவனங்களும் செயலாற்றி வந்தன. கோவையில் பேசும்படம் சினிமா இதழ் பிறந்து கவர்ச்சி அம்சங்கள் ஏற்று. வளர்ச்சிப் பதையில் முன்னேறிக் கொண்டிருந்தது. சேலத்திலும் சென்னையிலும் வேறு சில இதழ்களும் சினிமாவுக்காகத் தோன்றி, சினிமாத் துறையில் ஆதரவு பெற்று வளர்வதற்குப் போட்டியிட்டன. இருப்பினும் சினிமா உலகம் இதழுக்குத் தனி மதிப்பு இருந்தது. இந்தச் சமயத்தில் அதன் விலை இரண்டனா ஆகியிருந்தது. ஸ்டுடியோச் செய்திகள், திரைப்படத் தகவல்கள், பட விமர்சனம், கேள்வி பதில் போக, கதை, கட்டுரை, கவிதைகளும் அதில் இடம் பெறுவது வழக்கம். வருடம்தோறும் இரண்டு மூன்று மலர்கள். தீபாவளிமலர், புதுவருட மலர், சித்திரை மலர் என்று வெளியிடப்பட்டன. மலர்கள் வெளியிடுவது விளம்பரங்கள் மூலம் பணவருமானம் பெறுவதற்காக அப்படி விளம்பரங்கள் பெறுவதற்காக, செட்டியார் சேலம், திருச்சி, சென்னை என்று சுற்றிக் கொண்டேயிருப்பார். அப்போது அங்குள்ள எழுத்தாளர்களுடன் தொடர்பு கொண்டு விஷயங்கள் சேகரித்தும் வருவார். ஆகவே, விளம்பர பலத்துடன் விஷய கனம் கொண்டதாகவும் சினிமா உலகம் மலர்கள் அமைந்திருந்தன. இருப்பினும், செட்டியார் பத்திரிகையில் வளர்ச்சியின் ஆர்வம் கொண்டவராகயில்லை. ஐநூறு பிரதிகள் அச்சிடப்படுவதே போதுமானது. மேலும் பிரதிகளை அதிகரித்தால் தாள் விலை, அச்சுக்கூலி காரணமாகச் செலவுகளும் அதிகமாகும்; விளம்பர வருவாய் லாபகரமாக இருக்கிறது. செலவுகளைக் கூட்டி நஷ்டத்தை உண்டாக்குவானேன் என்பது அவருடைய எண்ணமாக நிலை பெற்றிருந்தது. சில மாதங்களில், எனது உழைப்பையும் ஈடுபாட்டையும் உணர்ந்து மகிழ்ச்சி அடைந்த செட்டியார், ஆசிரியர். பி.எஸ். செட்டியார் என்று அச்சிடும்