பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8.4 வாழ்க்கைச் சுவடுகள் எண்ணியவை எல்லாம் - அல்லது அவற்றில் பெரும் பகுதியேனும் - எங்கே நிறைவேறுகின்றன? சினிமா உலகம் செட்டியாரின் எல்லா ஆசைகளும் செயல்மலர்ச்சி பெறமுடியாத தன்மையிலேயே இருந்தது. வழக்கமான காரியங்கள் வழக்கம்போல் நடந்து கொண்டிருந்தன. என் மனக்குறை தீர வழி எதுவும் பிறந்துவிடவில்லை. மேலும் மூன்று மாதங்கள் ஒடிப்போயின. இனியும் இங்கேயே இருப்பதில் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தேன். நல்லவிதமாகச் செட்டியாரிடம் சொல்லிக் கொண்டு பிரிந்து போவது நடக்கக் கூடிய காரியமாக இல்லை. ஆகவே ஒரு வழி சொல்லி, பெரு வழி போவதே நான் செய்ய வேண்டியதாகும் என்று தீர்மானித்தேன். நான் திருநெல்வேலியை விட்டு வந்து பத்து மாதங்கள் ஆகின்றன: அம்மாவுக்கு உடல் நலம் சீராக இல்லை என்னைப் பார்க்க விரும்புகிறாள் என்று சொல்லிவிட்டு, திருநெல்வேலி போவதாகப் பெயர்பண்ணி, சென்னைக்கு ரயிலேற வேண்டியது தான் என்று திட்டமிட்டேன். எனவே என் அண்ணாவுக்குக் கடிதம் எழுதி, நான் உடனே ஊருக்கு வரவேண்டும் என்று குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதி அனுப்பும்படி கேட்டேன். அவ்வாறே கடிதம் வந்தது. அதைச் செட்டியாரிடம் காட்டி ஊர் போவதற்கு அனுமதி பெற்றேன். பணமும் பெற்றுக் கொண்டேன். இரவு 12 மணி அளவில் கோவையிலிருந்து திருநெல்வேலிக்கு ஒரு ரயிலும், சென்னைக்கு ஒரு ரயிலும் புறப்படும் என்று தெரிந்துவைத்திருந்தேன். புறப்படவேண்டிய நாளில் இரவு 10 மணி வரை, எழுத வேண்டிய டைப் செய்ய வேண்டிய கடிதங்கள் பலவற்றையும் எழுதிமுடித்து மேஜையில் சீராக வைத்தேன். வீட்டில் பலரும் தூங்கிவிட்டார்கள். 11 மணி-அளவில், பெட்டியை எடுத்துக்கொண்டு மெதுவாக வெளியேறினேன். ரயில் நிலையம் தூரத்தில் இல்லை. கிருஷ்ணன் என்னைத் தேடிக்கொண்டு வந்துவிடக்கூடாது என மனம் உருப்போட்டவாறு இருந்தது. சென்னைக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு உரிய ரயிலில் ஏறி, மறைவாக உட்கார்ந்து கொண்டேன். வண்டி புறப்படும் வரையில், கிருஷ்ணன் வந்து விடுவாரோ என்னைக் கண்டுபிடித்து விடுவாரோ?' என்று உள்ளப் பதைப்பு என்னில் இருந்தது. - - நல்ல வேளை சென்னை டோகிற ரயில் முதலில் புறப்பட்டது. இனிமேல் யார் வந்து தேடினாலும் கவலையில்லை என்று மனம் நிம்மதி அடைந்தது. திருநெல்வேலியில் இருந்து நான் எழுதுவதுபோல, என் நிலைமையையும் பிரயாணத்தையும் விரிவாகக் கூறும் ஒரு கடிதம் எழுதி, ஏற்கெனவே