பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 85 அண்ணாவுக்கு அனுப்பியிருந்தேன். மூன்று நாட்கள் கழித்து அதைச் செட்டியாருக்குத் தபாலில் அனுப்பிவிடும்படியும் கேட்டிருந்தேன். அப்படியே செய்யப்பட்டது. எஸ்.பி. கிருஷ்ணன் என்னை வழி அனுப்புவதற்காக ரயில்நிலையத்துக்கு வருவதாகயிருந்தார். ஆனால் அவர் துங்கிவிட்டார். திடீரென விழித்துக் கொண்டு நேரமாகிவிட்டதே என்று உணர்ந்து நான் ஏற்கெனவே போய்விட்டேன் எனக் கண்டு கொண்டு, வேகம் வேகமாக ரயிலடி வந்தார். திருநெல்வேலி போகிற ரயில் நின்றது. அவர் ஒவ்வொரு பெட்டியினுள்ளும் சன்னல் வழியாக எட்டிப் பார்த்து, 'வல்லிக்கண்ணன் வல்லிக்கண்ணன் என்று கூவியபடி பிளாட்டாரத்தில் அங்குமிங்குமாக நடந்து பார்த்தார். ரயில் கிளம்பிவிட்டது. சரி. வண்டியில் கூட்டத்துக்கிடையில் சிக்கியிருப்பார் என்று எண்ணிக்கொண்டு வீடு திரும்பினார். பின்னர் அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் நேரிட்டபோது, கிருஷ்ணன் இதை என்னிடம் சொன்னார். மேலும் தமாஷாகக் குறிப்பிட்டார். 'அன்றைக்கு ராத்திரி, ரயிலை ஒட்டி பிளாட்பாரத்திலே, காப்பி-காப்பி. வடை முறுக்கு என்று கூவி விற்கிறவர்கள் மாதிரி, நான் வல்லிக்கண்ணன்-வல்லிக்கண்ணன் என்று சத்தமிட்டபடி அங்குமிங்கும் அலைந்தேனா இவன் என்னடா புதுசா என்னமோ விற்கிறானே என்று மற்றவங்க எண்ணியிருப்பாங்க இதைக் கூறிவிட்டு உரக்கச் சிரித்தார் நண்பர். கோயம்புத்தூரில் நான் ஒன்பது மாதங்கள் தங்கியிருந்தேன். எனது அனுபவ ஞானம் விரிவடைவதற்கு அந்தக் காலகட்டம் நன்கு உதவியிருந்தது. 14 சென்னை போட்ச் சேரவேண்டும் என்று வெகுகாலமாக ஆசை வர்ைத்து வந்த தான் ஒருவது சென்னை நகரம் வந்துவிட்டேன் 243 டிசம்பர் மாதம் ஒரு நாளில் நேரே நவசக்தி அலுவலகம் போப்ச் சேர்ந்தேன். மயிலாப்பூர் நடுத்தெருவில் அந்த அலுவலகம் இருந்தது. வசதியான தனிவீடு. ஒரு டிரெடில் மிஷின் அச்சகத்துக்குரிய இதர சாமான்கள் பலவும் அங்கேயிருந்தன. அங்கே யாரும் குடியிருக்கவில்லை. அது ஆபீஸாக மட்டுமே பயன்பட்டது. நான் வந்து சேர்ந்த நாளில் சக்திதாசன் சுப்பிரமணியம் சென்னையில் இல்லை. நவசக்திக்கு நிதிவசூல் செய்வதற்காக அவர் இலங்கை போயிருந்தார். அந்தக் கட்டித்தில், கிராம ஊழியன் ஆசிரியர் திருலோக சீதாராம் தங்கியிருந்தார். துறையூரில் புத்துயிர் பெற்று மறுமலர்ச்சி இலக்கிய மாதம்