பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£32 வாழ்க்கைச் சுவடுகள் மொழிகளிலும் மக்கள் கலையான நாடோடிப் பாடல்களைச் சேகரித்து ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிவைத்திருந்தார். அவர் தந்த உந்துதலில் தமிழ்நாட்டிலும் சிலர் நாட்டுப் பாடல்களைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். மு. அருணாசலம் அப்படிப் பாடல்கள் சேகரம் செய்தார். அவற்றைத் தொகுத்து காற்றிலே மிதந்த கவிதை என்று புத்தகமாக வெளியிட்டார். சக்தி காரியாலய வெளியீடு அது. கி.வா.ஜவும் நாட்டுப் பாடல்கள் சேகரித்தார். பத்திரிகைகளில் அவை பற்றி எழுதினார். அவர் சேகரித்த பாட்டுக்களை ஒரு பெரிய 'பவுண்டு நோட்டில் எழுதி வைத்தார். பின்னர் யாரோ அந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் சென்றுவிட்டார்கள். அப்படி எடுத்துச் சென்றவர் மனம்வருந்தி திரும்பக் கொண்டுவந்து அதைத் தம்மிடம் சேர்த்துவிடுவார் என்று நம்புவதாக கி.வா.ஜ. குறிப்பிட்டு வந்தார். நம்பிக்கை தெரிவித்துப் பத்திரிகைகளிலும் எழுதினார். ஆசையோடு அந்தப் பெரிய நோட்டை எடுத்துச் சென்றவருக்கு மனசாட்சி உறுத்தியதாகத் தெரியவில்லை காபூ பூரீ ய்ையும் பூரீநிவாச ஆச்சார்யா அவர் வீட்டிலேயே கண்டு பேசினோம். வி.ஸ். காண்டேகர் நாவல்களை ஒவ்வொன்றாக மொழிபெயர்த்து அவர் கவனிப்புப் பெறத் தொடங்கிய சமயம் அது காண்டேகர் நாவல்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். 'கருகிய மொட்டு என்ற நாவலைத் தமிழாக்கியிருப்பதாகவும் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் சொன்னார். அந்த நாவல் பரபரப்பு ஏற்படுத்தத்தான் செய்தது. இல்லற வாழ்வில், ஒத்த உணர்வுகள் கொண்ட ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாகச் சேர்வதில்லை. பொருந்தாத ஜோடிகளே திருமணம் மூலம் இணைகின்றனர். அவர்களுடைய தாம்பத்திய உறவு பரஸ்பரம் திருப்தி அளிப்பதில்லை. அதனால் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இல்லாமல் போகிறது. இதை சில ஜோடிகள், கணவன் தனியாகவும் மனைவி தனியாகவும், அவரவர் அனுபவங்களையும் உணர்ச்சிகளையும் மூடிமறைக்காமல் வெளியிடுவதுபோல் எழுதப்பட்ட நாவல். கதைமாந்தரே தனித் தனியாகப் பேசுவதுபோல் அமைந்திருக்கும். அழகான உவமைகள், கற்பனை நயம், கவிதைத்தன்மை, இனிய நடை, ரசமான கதையமைப்பு எல்லாம் வாசகர்களைப் பெரிதும் ஈர்த்தன. பத்திரிகைகள் விரிவாக விமர்சனம் எழுதின. கு.ப. ராஜகோபாலன் கிராம ஊழியன் இதழில் நீண்ட விமர்சனக் கட்டுரை எழுதினார். காண்டேகர் பாணியில் தமிழில் சிலர் நாவல் எழுதமுற்பட்டனர். அவற்றில் தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய முதல் இரவு குறிப்பிடத் தகுந்தது ஆகும்.