பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 33 மலருக்குக் கதை கேட்பதற்காக நாங்கள் சந்தித்தவர்களுள் கா.சீ. வேங்கடரமணியும் ஒருவர். மயிலாப்பூர் அலர்மேல்மங்காபுரத்தில் அவர் வசித்துவந்தார். 'பாரத மணி என்ற பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தார். கிராம முன்னேற்றம், கிராம சமுதாய மறுமலர்ச்சி போன்ற இலட்சிய நோக்கத்துடன் அவர் வெகுகாலமாக எழுதிவந்தார். பத்திரிகை லாபகரமாக நடக்கவில்லை. பரவலாக அது அறியப்பட்டிருக்கவுமில்லை. அவரே மெலிந்து தளர்ந்துதான் காணப்பட்டார். ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு நான் பரமக்குடியில் கா.சீ. வேங்கடராமணியின் ஆங்கில நூல்களைப் படித்துச்சுவைத்தது என் நினைவில் எழுந்தது. அத்தகைய சிந்தனை நூல்களை ஆங்கிலத்தில் எழுதி லண்டன் மாநகர வெளியீட்டாளர் மேக்மில்லன் கம்பெனியார் பிரசுரித்த புத்தகங்களின் ஆசிரியர் அவர் 'முருகன் ஓர் உழவன் என்ற நாவல் மூலம் பிரபலமானவர். அவரை நேரில் பார்க்கக்கூடிய வாய்ப்பு கிட்டியது என் உள்ளத்தில் உவகை மலரச் செய்தது. - பேராசிரியர் கே. சுவாமிநாதனைக் காணச் சென்றோம் ஒரு நாள். அவர் வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது, வையாபுரிப்பிள்ளையும் பெ.நா.அப்புஸ்வாமியும் அங்கு வந்தார்கள். பேராசிரியர் எங்கள் இருவரையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். பியூரீ ஆச்சார்யாவையும் ஒருநாள் சந்தித்தோம், - காரைக்குடியில் இருந்து சக்தி காரியாலயம் மீண்டும் சென்னைக்கே வந்திருந்தது. அதன் அலுவலகம் பவளக்காரத்தெருவில் இருந்தது. தி.ஜரவைக் கண்டு பேச நாங்கள் அங்குப் போனோம். அங்கே மஞ்சேரி எஸ். ஈஸ்வரனும் இருந்தார். அவரிடமும் கதை கேட்டார் திருலோகம். அவரது வீட்டு விலாசத்தைக் கேட்டுக் குறித்துக் கொண்டார். அன்று இரவே மஞ்சேரி ஈஸ்வரனைப் பார்க்கப் போவோம் என்று திருலோகம் என்னையும் அழைத்துச் சென்றார். அவர் வீடு எழும்பூரில் பஞ்சவடி என்ற பகுதியில் இருந்தது. இருட்டில் சிரமப்பட்டுத் தெருவைக் கண்டுபிடித்து, ஈஸ்வரன் வீட்டையும் கண்டுகொண்டோம். அவர் வீட்டில் இருந்தார். அந்த நேரத்தில் எங்கள் இருவரையும் அவர் எதிர்பார்க்கவில்லை. ஆச்சர்யம் அடைந்தார். ஏது இவ்வளவு தூரம் என்று கேட்டார். கிராம ஊழியன் மலருக்குக் கதை கேட்கலாம் என்றுதான் வந்தோம் என்று திருலோகம் சொன்னார். அது தான் சக்தி காரியாலயத்தில் இருந்தபோதே கேட்டீர்களே. நானும் எழுதித் தருவதாகச் சொன்னேனே என்றார் ஈஸ்வரன்.