பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 95 நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வீட்டில் அவர் மனைவியோடு குடியிருந்தார். ரோட்டடி வீடு. திருலோகம் அவரிடம் என்னைப் பற்றிச் சொன்னார். ஒ. நான் இவர் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன் என்றார் அவர் மலருக்குக் கதை கேட்டார் 'கதையோ அல்லது வேறு எதுவோ எழுதி அனுப்புகிறேன்' என்று புதுமைப்பித்தன் சொன்னார்.பிறகு பேச்சோடு பேச்சாகத் திருலோகம் நீங்கள் ஒரு உதவி பண்ணவேண்டும். இவருடைய அண்ணன் சும்மா இருக்கிறார். நன்றாக மொழி பெயர்க்கக்கூடியவர். சொந்தமாகவும் எழுதுவார். நீங்கள் அவருக்குத் தினசரியில் வேலை வாங்கித் தந்தால் உதவியாக இருக்கும் என்று கோரிக்கை வைத்தார். 'அதுக்கென்ன எடிட்டர் கிட்டே சொல்லி, முடிந்ததைச் செய்கிறேன். இன்னும் ஒரு வாரம் கழித்து வந்து பாருங்க' என்று புதுமைப்பித்தன் தெரிவித்தார். நாங்கள் விடைபெற்று வந்தோம். ஒரு வாரத்திற்குப் பிறகு நான் மட்டும் புதுமைப்பித்தன் வீட்டுக்குப் போனேன். திருலோகம் துறையூர் போய்விட்டார். என்னைக் கண்டதும் புதுமைப்பித்தன் நான் மலருக்கு விஷயம் அனுப்பிவிட்டேனே' என்றார். 'அதற்காக நான் வரவில்லை. என் அண்ணனுக்குத் தினசரியில் வேலை விஷயமாக...' 'ஓ அதுவா? நான் இன்னும் எடிட்டரிடம் பேசவில்லை. பார்த்துச் சொல்கிறேன். இன்னொரு நாள் வாங்க' என்று கூறி என்னை அனுப்பி வைத்தார். . நானும் நாலைந்து தடவை போனேன். ஒவ்வொரு முறையும் 'எடிட்டர் ஊரில் இல்லை 'நான் இன்னும் அதுபற்றி எடிட்டரிடம் சொல்லவில்லை' என்று ஏதாவது சொல்லி மற்றுமொரு நாள் வரும்படி சொல்வார். எங்கள் சந்திப்பு இந்த ரீதியில் அமைந்திருந்ததே தவிர, பத்திரிகைகள்-எழுத்து - இலக்கியம் சம்பந்தப்பட்டதாக இருந்ததில்லை. அதன் பிறகு நான் அவரைப் பார்க்கப் போகவுமில்லை. பொதுவாக, எந்த எழுத்தாளரையும் அல்லது பத்திரிகை ஆசிரியரையும் போய்ப் பார்க்க வேண்டும். கண்டு பேச வேண்டும் என்ற அவா எனக்கு என்றும் இருந்ததே இல்லை. அவர்களுடைய எழுத்துக்களை, பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் படிப்பதில்தான் எனக்கு நாட்டம் அதிகமிருந்தது. கிராம ஊழியன் பொங்கல் மலருக்குப் புதுமைப்பித்தன் ஒரு கவிதை அனுப்பியிருந்தார். வேளுர் வெ. கந்தசாமிக் கவிராயர் என்ற பெயரில் அவர் அதை எழுதியிருந்தார். 'உண்டுண்டு கடவுளுக்குக் கண்உண்டு கண்ணோ