பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



5
பணத்தை எப்படிச் சம்பாதிப்பது?


பத்து லட்சம் டாலர் ஒரு வியாபாரத்தில் நஷ்டமடைந்தவன் “எப்படிப்பணம் சம்பாதிப்பது” என்று ஒரு புத்தகம் எழுதினால் எப்படியிருக்கும்? அந்தப் புத்தகத்தை யாராவது வாங்குவார்களா? அல்லது அவர் சொல்லியிருப்பதையாவது நம்புவார்களா? இப்படி நடக்குமா என்பார்கள்; ஆனால், நடந்து விடுகிறதே! பி.டி. பேர்னம் என்பவர் கடிகாரம் உற்பத்தி செய்யும் தொழிலை ஆரம்பித்தார். கடிகார உற்பத்தி மூலம் அவருக்கு லாபம் ஏற்படுவதற்குப் பதில் பத்து லட்சம் டாலர் நஷ்டம் ஏற்பட்டுவிட்து. பணம் நஷ்டம் அடைந்ததும் அவர் மனமுடைந்துபோனார். அவர் தம்மனத்தைத் தேற்ற “எப்படி பணம் சம்பாதிக்கலாம்? என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார். அதை அச்சடித்து ஒரே நாளில் ஏராளமான பிரதிகளையும் விற்றார் அதுவரை எல்லா வகையிலும் தோல்வி கண்ட அவருக்கு அந்தப் புத்தகம் எழுதிய பிறகே பணம் சம்பாதிக்கும் வழி தெரிந்தது.