பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்

25


பேர்னம் அமெரிக்காவைச் சேர்ந்தவர். அவர் இளைஞராக இருக்கும் போது, அவரிடம் ஐந்து ஆயிரம் டாலர் இருந்தது. அதைக் கொண்டு ஏதாவது வியாபாரம் செய்யலாம் என்று எண்ணினார். ஒரு நண்பனுடன் சேர்ந்து இயந்திரங்களுக்கு உபயோகிக்கும் கிரீஸ் என்ற எண்ணெயை உற்பத்தி செய்ய முற்பட்டார், அவருடன் கூட இருந்த நண்பன் பணத்தை மோசம் செய்து அவரை ஓட்டாண்டியாக்கிவிட்டுச் சென்றான். தோல்வியும் நஷ்டமும் கண்ட பேர்னம் மனம் உடையாமல் சிலரை நாடி பணம் சம்பாதித்தார். அதைக்கொண்ட கெடி காரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை வைத்தார். அதில்தான் பத்து லட்சம் டாலர் நஷ்டம் ஏற்பட்டது. அதன் பிறகுதான் அவர், “எப்படிப் பணம் சம்பாதிப்பது?” என்ற புத்தகத்தை எழுதினார் இந்த புத்தகத்தின் மூலம் அவருக்கு 200 டாலர் கிடைத்தது. அதைக் கொண்டு சர்க்கஸ் கம்பெனி ஒன்றை அமைத்தார். அதில் பல தந்திரங்களை கையாண்டார். விளம்பரங்களை ஒரு புது முறையாகச் செய்வார். அதைக் கண்டு மக்கள் ஏராளமாகக் கூடி விடுவார்கள். ஆனால், உண்மையில் அவர் விளம்பரம் செய்தபடி இருக்காது. இதை அவர் வெகு நகைச்சுவையாக எடுத்துக் காட்டுவார். அதாவது, தான் செய்வது மோசமானதுதான் என்பதை சொல்லாமல் சொல்வார். ஆனால் மக்கள் அவருடைய நகைச்சுவை முறையைக் கண்டு அவர் செய்த மோசத்தை மறந்து விடுவார்கள்.