பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்


கெய்ஸர் பல தொழிற்சாலைகள் நடத்தி வந்தார். பணம் அவரைத் தேடிவந்து குவிந்தது. ஆனாலும், அவர் சலியாமல் வேலை செய்துவந்தார் அவரைப் போலவே அவரிடம் வேலை செய்பவர்களும் சோம்பல் என்பதையே தெரியாதவர்களாக இருக்க வேண்டும். தன்னைப்போல் அவர்களும் முன்னுக்கு வரவேண்டும் என்று கெய்சர் விரும்புவார்.