பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்

35


இயந்திரத்தை விட மனிதன் கையினாலேயே வேகமாக செருப்பை தைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு அக்காலத்திலேயே ஏற்பட்டது.

தாமஸ் பேட்டாவுக்கு ஐந்து வயதாகி இருக்கும்போது, அவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். வெளிநாடுகள் சென்று இயந்திரத்தைக் காட்டிலும் வேகமாகச் செருப்பு தைக்க கற்றுக்கொள்ள முயற்சித்தார். ஊக்கமும் முயற்சியும் இருந்தால் வெற்றி கிட்டாமல் போகுமா? அவர் சில வருடங்களிலேயே வேகமாகச் செருப்பு தைக்கும் நிலையை அடைந்தார். பிறகு ஒரு நண்பர் இருக்குமிடத்தில் 50 பவுன் மூலத்துடன் 1905ம் வருஷம் ஒரு சிறு செருப்புத் தொழிற் சாலையை தொடங்கினார். விடாமுயற்சியின் பலனாக தாமஸ் பேட்டாவின் தொழிற்சாலை நாளடைவில் பெரிதாகிக் கொண்டே வந்தது. முதலில் சில்லறை வியாபாரியாக இருந்த அவர், நாளாவட்டத்தில் பெரிய வியாபாரியாக மாறினார். அத்துடன் மக்களின் மனப்போக்கை அறிந்து, அவர்களுக்குப் பிடிக்கும்படியாக புதுமாதிரியான செருப்புக்களைத் தயார் செய்தார். இதனால் வியாபாரம் மேலும் மேலும் பெருகிக் கெண்டே இருந்தது.

பேட்டாக் கம்பெனி செருப்புக்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டதும், அவர் ஒரு புது முறையைக் கையாண்டார். ஒவ்வொரு நாட்டிற்கும் தயார் செய்து அனுப்புவதை விட, அங்கங்கே ஒரு தொழிற் சாலையை ஏற்படுத்தி நடத்தினால்