வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்
41
ஒரு சிறு அறையில் குடும்பம் நடத்தலானார். அவர் விட்டாலும் சட்டப் படிப்பு அவரைவிடவில்லை. அதிலேயே அவருடைய மனம் சென்றதால் அதையே மீண்டும் படிப்பது என்று தீர்மானித்தார்; படித்தும் முடித்தார்.
வருமானந்தான் ஒன்றுமில்லாதிருந்தது. இதனால் மனம் உடைந்து போனார் வெண்டல். ஆனால், அதற்காக அவர் சும்மா இருந்து விடவில்லை. சும்மா இருக்கும் சமயம் அமெரிக்க அரசாங்க சட்டத்தைப்பற்றி நன்கு ஆராய்ச்சி செய்யலானார். ஆராய்ச்சியை எல்லாம் அவர் ஒரு புத்தகமாக எழுதினார். புத்தகம் வெளியாயிற்று. ஆனால் பலன்தான் கிடைக்கவில்லை.
அப்போது அவருக்கு 39 வயது பூர்த்தியாகி இருந்தது. இத்தனை நாட்கள் வரை வாழ்க்கை ஒரு நிலையில் ஸ்திரமாக ஆகாமல், இனி எங்கே ஆகப் போகிறது என்று அவர் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போதே அவருக்கு சட்டக் கல்லூரியில் பேராசியர் பதவி கிடைத்தது.
பேராசிரியர் வேலையில் அமர்ந்த அவர் சிறிது நாட்களுக்குள்ளாகவே அதைவிட்டுவிட வேண்டியதாயிற்று. முஸ்ஸா செஸ்ட் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்தவர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அப்பதவிக்கு தகுதியான ஆள் வெண்டல் தான் என்று கவர்னர் தீர்மானித்தார். உடனே அவரை அழைத்து சுப்ரீம்கோர்ட் நீதிபதியாக நியமித்தார்.