பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



8
கனவில் கண்ட கடை


‘டார்ஜான் கதை’ ஆப்பிரிக்கா நாட்டு காடுகளில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அக்காடுகளைக் கதைக்குப் பக்கபலமாகக் கொண்டதாலேயே அது பிரசித்தி அடைந்தது என்றும் சிலர் சொல்லுகிறார்கள் ஆனால், அக்கதையை எழுதிய எட்கார்ரைஸ்பர்ரோ என்பவர் ஆப்பிரிக்கா தேசத்தையே பார்த்ததில்லை என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா?

எழுத்தாளர்களிலேயே பர்ரோதான் மிகவும் அதிகமாகச் சம்பாதித்தவர். அவர் தமது எழுபத்தி ஐந்தாவது வயதில் காலமானார். அவர் எழுதிய ‘குரங்கு மனிதன்’ மூலம் மாத்திரம் அவருக்கு இருபது லட்சம் டாலருக்கு மேல் கிடைத்திருக்கிறது.

மோட்டார் முதல் சாக்லெட் வரை பல சாமான்களை பர்ரோ வியாபாரம் செய்திருக்கிறார். வியாபாரத்தில் எல்லாம் தோல்வி ஏற்படவே அவர் ஒரு கடையில் குமாஸ்தா