பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்

45


வேலையில் அமர்ந்தார். அந்த வேலையும் அவருக்கு சரிபட்டு வரவில்லை. அதனால் அவர் அந்த வேலையையும் விட்டுவிட்டார். இப்படி எல்லாவற்றிலும் அவருக்குத் தோல்வி ஏற்பட்டதால் அவர் மனம் சஞ்சலம் அடைந்தது. இனி என்ன செய்வது என்று சதா அவர் சிந்தித்துக் கொண்டிருக்கலானார்.

பர்ரோவுக்குக் கவலைகள் அதிகமாகவே இரவு நேரங்களில் தூக்கமே வராதாம். அப்படியே கொஞ்சம் தூக்கம் வந்தாலும் கண் மூடிய சிறிது நேரத்திற்கெல்லாம் அவருக்கு பயங்கரக் கனவு ஏற்பட்டுத் தூக்கம் கலைந்துபோய் விடுமாம். கண் விழித்து எழுந்த பர்ரோ தான் கண்ட கனவைப்பற்றி சிந்தித்துக் கொண்டே இரவு முழுவதையும் கழிப்பாராம். அப்படித்தான் வழக்கம் போலவே ஒரு நாள் அவருக்கு தூக்கம் வந்தது கண்ணை மூடினார் சில வினாடிகளே ஆகியிருக்கும். ஒரு பயங்கரக் கனவு கண்டு உடனே எழுந்து விட்டார். இந்தச் சமயம் அவர் கண்ட கனவைப் பற்றிச் சிந்திக்கவில்லை. அதற்குப்பதிலாக தாம் கண்ட கனவை எப்படிப் பணமாக்குவது என்று யோசித்தார் இரவு முழுவதும் நன்கு யோசித்த பிறகு மறுநாள் காலையில் தாம் கண்ட கனவுகளை கதைகளாக எழுதலானார் அதைப் புத்தகமாகவும் வெளியிட்டார். சொந்தப் பெயரில் அல்லாமல் “நார்மல் பீன்” என்ற புனைப்பெயரிலேயே வெளியிட்டார். கற்பனைக்கும் எட்டாத அக்கட்டுக் கதைகள் முதலில் விலை