பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்


போகவே இல்லை. பர்ரோ அப்புத்தகங்களை வீடு வீடாக எடுத்துச் சென்று விற்று வந்தார். இதனால் அவருக்கு உணவிற்கு ஓரளவு நடந்து வந்ததே ஒழிய அதிக லாபம் கிடைக்கவில்லை.

பர்ரோ மேலும் சிந்தித்தார். அச்சமயம் ஸ்டேன்லி என்பவர் எழுதிய “இன் டார்க்கஸ்ட் ஆப்பிரிக்கா” என்ற புத்தகம் வெளி வந்தது. அப் புத்தகத்தை வாங்கிப் படித்த பர்ரோவுக்கு, ஒரு யோசனை தோன்றிற்று, அதன்படியே அவர் “குரங்கு மனித”னை உருவாக்கினார். 1912ம் வருஷம் குரங்கு மனிதனின் அவதாரமான “டார்ஜான் கதை” ஒரு பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்தது, அதன் பிறகு, அது புத்தகமாக வெளி வந்ததும் மக்ககளிடையே ஏகப் பரபரப்பை உண்டு பண்ணியது.

மக்கள் டார்ஜான் கதையை விரும்புகிறார்கள் என்பதை அறிந்த சினிமாப்படக் கம்பெனிக்காரர்கள் அதைப்படமாகத் தயாரிக்க முற்பட்டனர். அக்காலத்தில் பேசும்படம் இல்லையாதலால் முதலில் எல்மேர் லிங்கன் என்ற பலசாலியை டார்ஜானாகப் போட்டு படம் தயாரித்தனர். டர்க்கிவந்ததும் அதைத் திரும்பவும் பல நடிகர்களைக் கொண்டு படம் தயாரித்தனர். இதுவரை டார்ஜான் கதை இருபத்தி ஐந்து படங்களாக வெளிவந்திருக்கின்றன. அவை அத்தனையும் குரங்குமனிதன் தொடர்ச்சியாக எழுதப்பட்டவை.