பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்


இருந்தது. அதனால் அவர் தாம் இருக்கும் உருக்கு அருகிலிருக்கும் இடங்களுக்கு அடிக்கடி போய் வருவார். இப்படி அவர் வீணே சுற்றி வருவதைக் கண்டு அவருடைய தகப்பனார் மனம்வருந்தினார். பையன் இப்படித் திரிந்து கொண்டிருந்தால் பிற்காலத்தில் எப்படிப் பிழைக்கப் போகிறான் என்று பெரிதும் கவலைப்பட்டார். அதே சமயம் பையனுடைய மனதிலும் ஒரு யோசனை தோன்றியது. பணவசதி இல்லாததால் வெளி நாடுகளுக்குச் செல்ல முடியவில்லை. அங்குள்ளவர்களின் பேச்சைக் கேட்க முடியவில்லையே. ஆனால் ஆசையோ விட்டபாடில்லை. இதற்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டுமே என்று கருதினார். தேசங்களைப் பார்க்காவிட்டாலும் ஒரு நாட்டிலிருப்பவன் வேறு நாட்டிலிருப்பவனுடைய பேச்சையாவது கேட்க வழி கண்டுபிடிக்க முயற்சி செய்தார்.

மின்சாரத்தின் மூலம் ஒரு கருவியைச் செய்து அதன் மூலம் எல்லா நாடுகளிலும் பேசுவதைக் கேட்கலாம் என்று அவர் மனதிற்குத் தோன்றியது அதற்கு இணங்க தம்முடைய ஆராய்ச்சியைத் தொடங்கினார். ஆனால், அவர் ஆராய்ச்சியில் வெற்றி கானும் வரை, தம்முடைய எண்ணம் ஈடேறும் என்று நம்பவே இல்லை. அவருடைய தகப்பனாரும் அவருடைய முயற்சி வீண் என்றே கூறிவந்தார். வெகு நாட்களுக்குப்பிறகு, மார்கோனியின் ஆராய்ச்சியில் வெற்றி கிடைத்தது. வெற்றியைக் கண்டதும்