பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்


இன்று மார்கோனியால் உலகத்தில் நடக்கும் பல நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் நாம் கேட்கிறோம். அவரைப் புகழ்ந்து பேசுகிறோம். பிற்காலத்தில் மார்கோனி இப்படிப் பிரபலம் அடைவார் என்று அவருடைய தகப்பனாரோ, மற்றும் அவரை இளமையில் கண்டவர்களோ கனவு கூடக் கண்டிருக்க மாட்டார்கள். ஏன், அவரே கூட கற்பனை செய்து பார்த்திருக்கமாட்டார் அல்லவா?