60
வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்
மோதிவிட்டார். இதனால் அவர் விமானம் ஓட்டக் கற்றுக்கொண்டும் பலனில்லாமல் இருந்தது. அதனால் அவருக்கு விமானம் ஓட்டுவதற்கு அரசாங்கம் அனுமதி அளிக்க மறுத்தது.
அரசாங்கத்தாரிடம் வெகுவாக வாக்குவாதம் செய்து விமானம் ஓட்ட அனுமதி பெற்றார் பையர். ஆனால், அவர் வெகு நாளைய ஆவலான வடதுருவத்தைக் காணவேண்டும் என்பதற்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. பையர் இதனால் மனம் உடைந்து போய்விடவில்லை. அவர் அரும்பாடுபட்டு சில பணக்காரர்களைக் கண்டு தன் எண்ணத்தைச் சொன்னார். அந்த பணக்காரர்கள் அவருடைய எண்ணத்தை அறிந்து அவருக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தனர்.
பையர் வடதுருவப் பிரயாணத்தைத் துவக்கினார். மிகவும் கஷ்டப்பட்டு வட துருவத்தை அடைந்தார். அங்கு ஒரு அமெரிக்கக் கொடியை நாட்டிவிட்டுத் திரும்பினார். முதலில் வடதுருவத்தைக் காண வேண்டுமென்றிருந்த அவருக்கு அதைக் கண்ட பிறகு தென் துருவத்தையும் காண வேண்டும்மென்று தோன்றியது. அதனால் உடன் அங்கு செல்லவும் முயற்சி செய்தார் வடதுருவத்தை அடைந்ததுபோல் தென்துருவத்தையும் அடைந்தார். அங்கும் ஒரு அமெரிக்கக் கொடியை நாட்டி வந்தார். அவர் ஊர்திரும்பியதும், முன்னர் விமானம் ஓட்டவே அனுமதி