பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்

61


அளிக்க மறுத்த அரசாங்கமும் உதவியளிக்க மறுத்தவர்களும், அவரை வரவேற்கக் காத்துக் கொண்டிருந்தனர். லட்சக்கணக்கான மக்கள், அவர் வரவை எதிர்நோக்கி இருந்தனர். ரிச்சர்ட் பையருக்கு கிடைத்த வரவேற்பு அமெரிக்காவில் வேறு எவருக்கும் கிடைத்திருக்காது. அமெரிக்க அரசாங்கம் அட்மிரல் பட்டத்தையும் அளித்தது. அட்மிரல் ரிச்சர்ட்தான் முதன் முதலில் வடதுருவத்தையும் தென் துருவத்தையும் கண்டவர். விடாமுயற்சியால் வெற்றி கண்டார் பையர்.