பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்


அவருடைய ஆயுளை இன்ஷ்யூர் செய்துகொள்வது என்றால் எந்தக் கம்பெனிதான் துணிந்துமுன்வரும்?

இந்த இன்ஷ்யூரன்ஸ் விஷயத்தைப் போல் மற்றொன்றும் இருக்கிறது. கிளைடுபெட்டி காட்டு மிருகங்களை ஆட்டிப் படைத்தாலும் அவருக்கு மிகவும் விருப்பமான பிராணி நாய்தான்! அதை சர்க்கஸ் வேலை செய்யச் சொல்வதே அவருக்கு மிகுந்த விருப்பம். சர்க்கஸ் கம்பெனியில் கொடிய மிருகங்களை ஆட்டிப் படைக்கும் கிளைடுபெட்டி வீட்டில் பிரியமான பிராணிகளான நாய்களை வேடிக்கை செய்ய வைக்கிறார். அதில் தான் அவருக்கு மகிழ்ச்சி ஏற்படுவதாகவும் கூறுகிறார்.