பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்

83


இரண்டு வருடங்கள் வரை அவர் அங்கே சம்பளம் இல்லாமலே வேலை செய்தார். பிறகு தான் அவருக்குச் சொற்ப சம்பளம் கொடுத்தனர்.

இச்சமயத்தில்தான் அவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான சம்பவம் நடந்தது. தெருவில் போகும்போது அவர் சிறுபிள்ளைத் தனமாக வழியில் கிடக்கும் காகிதங்களைப் பொறுக்குவார். பிறகு அதைச் சுற்றி எறிவார். இப்படித்தான், ஒருநாள் ஒரு காகிதத்துண்டைப் பொறுக்கினார்; அது ஜோன் ஆப் ஆர்க் என்பவருடைய சரித்திரப் புத்தகத்தின் பகுதியைச் சேர்ந்தது. அதைப்படித்ததும் அவருக்கு அப்புத்தகத்தையே படிக்க வேண்டும் என்று தோன்றிற்றாம். இதிலிருந்து தான் அவருக்குப் புத்தகப்படிப்பில் அதிகக் கவனம் செல்லலாயிற்று. அப்படியே கதைகள், கட்டுரைகள் எழுதும் நிலைக்குக் கொண்டுவிட்டது.

மார்க்ட் வைன் நகைச்சுவையாகப் பேசுவார் நகைச்சுவையாக எழுதக் கூடியவர். அவருடைய சொற்பொழிவு என்றால் மக்கள் திரள் திரளாகக் கூடிவிடுவர்.

ஒரு சமயம் மார்க்ட்வைன் பெரிய கடனாளியாகி விட்டார். கடன்காரர்கள் அவரை நிர்ப்பந்தித்த சமயம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விடுவதாகவும், மோசம் செய்துவிடமாட்டேன் என்றும் கூறினார். அச்சமயம் அவருக்கு உடல்நிலை மோசமாக