பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்


இருந்தது. அப்படியிருந்தும கடனை தீர்ப்பதற்காக புத்தகங்கள் எழுதியும், பிரசங்கங்கள் செய்தும் பணம் சேகரித்தார். அவர் வாக்கு அளித்தபடியே கடன் பூராவையும் கொடுத்தார்.

மார்க்ட்வைன் எதிர்பாராத விதத்தில் எப்படி கதாசிரியரானாரோ அப்படியே அவருடைய கலியாணமும் நடந்தது. ஒரு கப்பலில் அவர் ஒரு பெண்ணின் போட்டோவைக் கண்டார். உடனே அவர் மனதில் அந்தப்பெண்ணின்மீது அன்பு ஏற்பட்டு விட்டது. வெகுநாட்களுக்குப் பிறகு, அதே பெண்ணைக் கண்டு அவர் கலியாணமும் செய்து கொண்டார்.

அவர் வாழ்க்கையில் அனுபவிக்கவேண்டிய சுகங்களை எல்லம் குறைவின்றி அனுபவித்தார், ஆனால் அவருக்கு ஒரு குறைமாத்திரம் இருந்து வந்தது. தான் பிறந்த சமயத்தில் தோன்றிய நட்சத்திரம் திரும்பவும் உதிக்கும்போது பார்த்துவிட்டு இறக்க வேண்டும் என்று அவருடைய 76வது வயதில் அவர் மரணப் படுக்கையில் படுத்திருந்தார். அவருடைய சிந்தனையில் தன் ஆவலைப் பற்றியே இருந்து வந்தது. 1910ம் வருடம் ஒரு இரவில் திடீரென்று வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றியது. வான வெளியையே பார்த்திருந்த மார்க்ட்வைன் அதைக்கண்டு புளகாங்கிதம் கொண்டார். உடனே தம் மகளை அழைத்து தனக்குப் பிரியமான நாடோடிப் பாடல் ஒன்றைப் பாடும்படி கூறினார். பாட்டைக் கேட்டுக்கொண்டே அவர் உயிர் துறந்தார்.