பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்


அதுபோல, மார்டின் மனதிலும் தான் கண்ட கனவும் வளர்ந்து கொண்டே இருந்தது. மார்டின் தன் மகனுடன் கொஞ்சும் போதெல்லாம் தான் கண்ட கனவைப் பற்றியே சொல்லிக் கொண்டிருப்பார். இதனால் பையனுக்கு ஒருவித ஆவல், ஏற்பட்டிருந்தது.

மார்டினுடைய மகன் கிளின் மார்டின் ஏழுவயது பையனாக இருக்கும்போது ஆகாயத்தில் பட்டம் பறப்பதை வெகு ஆவலுடன் கவனித்து வருவான். பட்டம் ஆகாயத்தில் பறப்பது போல், தன்னாலும் பறக்க முடியுமா என்று எண்ணுவான். அப்பொழுது அவனுடைய தாயார் கண்ட கனவு நினைவிற்கு வரும்.

கிளின் மார்டின் ஒரு சமயம் பட்டம் ஒன்று வாங்க தாயாரிடம் காசு கேட்டான். அச்சமயம் அவனுடைய குடும்பம் வறுமையால் பீடிக்கப்பட்டிருந்தது. அதனால் மகன் கேட்டபடி தாயாரால் காசு கொடுக்க இயலவில்லை. தாயார் மிகவும் வருந்தினார் ஆனால், மகன் மனம் தளரவில்லை. காசு கொடுத்து வாங்க முடியாத பட்டத்தைத் தானே செய்து கொள்ளலாம் என்று எண்ணினான். உடனே மூங்கில் கம்புகளையும், காகிதத்தையும் சேகரித்தான் அதைக் கொண்டு பிறர் உதவியின்றி பட்டம் ஒன்றை தயாரித்தான். அவன் செய்த பட்டம் , சாதாரணமாக மற்றவர்களுடையதைப்போல் இல்லாமல் புது முறையாக இருந்தது. இதைக்கண்ட பையனுடைய நண்பர்கள்