பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்

93


போர்டர் பாங்கி வேலையை விட்டு விட்டு, ‘போநிட்’ பத்திரிகையில் வேலை பார்த்தார். 1896 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அவர் சிறந்த பத்திரிகை ஆசிரியர் என்ற பெயர்வளர்ந்து வரும் பொழுது இவருக்கு ஒரு களங்கம் வந்தது ஆஸ்டினில் இவர் வேலை பார்த்தபொழுது, சுமார் 1580 டாலர்களுக்கு மேல் கையாடியிருப்பதாக வழக்குத் தொடுத்து, விசாரணைக்கு நோட்டிஸ் வந்தது. குற்றச்சாட்டுப் பிரகாரம் சுமார் முந்நூறு டாலர் போர்டர் பாங்கியிலிருந்து வெளியே போயிருந்த சமயத்தில் காணாமல் போயிருந்தது.

நேராக ஆஸ்டினுக்குப் போவதற்குப் பதிலாக, மத்திய அமெரிக்காவிற்கு ஓடினார் போர்டர். தம் மனைவியை அங்கு வந்து சேரும்படி சொல்லியிருந்தும், அவள் வந்து சேரவில்லை. சயரோகத்தால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அவள் இதற்கு பிறகு கொஞ்ச காலத்தில் இறந்துவிட்டாள்.

பிறகு, போர்டர் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குத் திரும்பினார். 1898ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி விசாரணை நடந்து தண்டனை தரப்பட்டது.

வழக்கு சம்பந்தமான விசாரணை நோட்டீஸ்வந்ததுமே, நேராக ஆஸ்டினுக்கு வராமல், மத்திய அமெரிக்காவிற்கு ஓடியதுதான் அவர் மீது பெருத்த சந்தேகத்திற்குக் காரணமாகும். தன்னுடைய வக்கீலுக்கு எந்த விதமான