பக்கம்:வாழ்க்கை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

3


யிருந்தும் மனிதன் எல்லா உயிர்களும் தான் சுகத்திற்காகவே அமைந்தவை என்று கருதுகிறான்.

உலகில் ஒவ்வொரு பிராணியும், தனக்கு அற்ப நன்மை கிடைப்பதற்காக, மற்ற உயிப்பிராணிகளின் நன்மையையும் உயிரையும் கூடப் பறிக்க வேண்டியிருக்கிறது. இதைப் பற்றி ஆராய்ந்து பார்க்கும் மனிதன், தனக்கு மட்டுமே வாழ்க்கை ஏற்பட்டிருந்த போதிலும், தனக்கு எதிராக வேறு பலர் இருப்பதைக் காண்கிறான். உலகமெங்கும் பரவி வாழும் உயிர்கள் பல தங்கள் தங்களுடைய சுய நன்மைக்காக அவனை அழித்துவிட ஒவ்வொரு கணமும் தயாராயிருக்கின்றன.

மனிதன் தன் நன்மையை அளவுகோலாகக் கொண்டே வாழ்க்கையை உணர்ந்துகொள்ள முடிகிறது. அந்த நன்மையை அடைவதும் சிரமமாயிருக்கிறது. அடைந்த நன்மையையும் மற்றவர் பறித்துவிடக்கூடும் என்பதும் புலனாகின்றது. மனிதனுக்கு வயது ஆக ஆக, அநுபவம் பெருகப் பெருக, உண்மை நிலைமை தெளிவாகின்றது உலகிலே பல மக்கள் கூடி வாழ்கின்றனர் ; தம்மிலேயே ஒருவரையொருவர் அழிக்கவும் விழுங்கிவிடவும் முயன்று கொண்டிருக்கின்றனர். அவர்களின் நடுவேயுள்ள ஒருவன் தான் தனி மனிதன். ஆகவே, வாழ்வு இன்பமாயிராமல் நிச்சயம் தீமையாகவேயிருக்கும் என்று அவனுக்குத் தோன்றுகிறது. வாழ்க்கைப் போராட்டத்தில் அவன் அபாயங்களை பொய்யா தாண்டி வெற்றி பெறுவதாகவே வைத்துக்கொண்டாலும், வாழ்விலிருந்து அவன் பெறக்கூடிய இன்பங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/10&oldid=1121499" இலிருந்து மீள்விக்கப்பட்டது