பக்கம்:வாழ்க்கை.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
98
வாழ்க்கை
 

‘உங்களைப் போலவே உங்கள் அண்டை வீட்டுக்காரர்களையும் நீங்கள் நேசிக்க வேண்டும்’ என்று பெருமானார் உபதேசித்தது யாருக்கும் எளிதில் விளங்கும். ஆனால், அதன் உட்பொருளை அறியாமல் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தால், முதலில் அண்டை வீட்டுக்காரன் யார் என்று தெரிய வேண்டியிருக்கிறது.

மனிதன் சிலரையே தேர்ந்தெடுத்துக் கொண்டு அவர்களிடம் மட்டும் அன்பு செலுத்துவதாக வைத்துக்கொண்டாலும், அவன் ஒருவரை மட்டுமே நேசித்துக்கொண் டிருக்கவில்லை. அவன் தன் தாய், மனைவி, குழந்தை, தேசம், மற்ற மக்கள் எல்லோரையுமே நேசிக்கிறான். அன்பு என்பது வெறும் சொல்லன்று ; அது செயல். மற்றவர்களின் நன்மைக்காக நடைபெறுவது. ஆனால், இந்தச் செயலில் வித்தியாசங்கள் ஏற்படுகின்றன. அதிக அன்புக்குப் பாத்திரமானவர்களையே நாம் முதலில் கவனிக்கிறோம் ; மற்றவர்களை அடுத்தபடியாகத்தான் கவனிக்கிறோம். பசியால் வாடும் ஒரு கிழவன் என்னிடம் வந்து, என் குழந்தைகளுக்காக நான் வைத்திருக்கும் உணவைக் கேட்கிறான். உணவை இப்போது வந்து கேட்கும் கிழவனுக்கு அளிக்க வேண்டுமா, அல்லது வைத்திருந்து பின்னால் குழந்தைகள் வரும்பொழுது அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமா ? இத்தகைய கேள்விகள், ‘என் அண்டை வீட்டுக்காரன் யார்?’ என்ற கேள்வியைப் போன்றவை.

நான் யாருக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதை எப்படித் தீர்மானிப்பது? மனிதர்களுக்கா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/105&oldid=1122185" இருந்து மீள்விக்கப்பட்டது