பக்கம்:வாழ்க்கை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

99


தாய் நாட்டிற்கா, என் நண்பர்களுக்கா ? என் மனைவிக்கா, அல்லது என் தந்தைக்கா, அல்லது என் குழந்தைகளுக்கா ? அல்லது எனக்கா? நான் நன்றாயிருந்தால்தான் மற்றவர்களுக்கும் சேவை செய்ய முடியும் என்பதால், எனக்காக உழைப்பதும் அன்பு மார்க்கமாகிறது!

அன்புக்காகச் செய்ய வேண்டிய காரியங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவை ஒன்றோடொன்று பின்னிக்கொண் டிருக்கின்றன. அவற்றில் சிலவற்றைச் செய்ய முடியவில்லை. பின்னால் எனக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உடை வேண்டியிருக்குமே என்ற கருத்துடன், இப்போது பனியில் நடுங்கிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தைக்கு நான் உடையளிக்க மறுத்தால், இது போலவே மற்ற விஷயங்களிலும் எதிர்காலத்தைக் கருதி நிகழ் காலத்தை இழக்க வேண்டியிருக்கும். இது என்னையே நான் ஏமாற்றிக் கொள்வதாகும்.

எதிர்கால அன்பு என்பது கிடையாது. இப்போது நடைபெறும் செயலே அன்பு. நிகழ் காலத்தில் அன்பு காட்டாதவனிடம் அன்பே இல்லை என்று அர்த்தம்.

வாழ்க்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாத மனிதர்கள் அன்பு என்று சொல்வது, அவர்கள் தங்கள் மனைவியர், குழந்தைகள், நண்பர்கள் முதலியோரிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்வது, மனைவியர், மக்கள், நண்பர்கள் மூலம் தாங்கள் நன்மையடைய வேண்டும் என்று கருதுவதையே குறிக்கும். மிருக இயல்பின் நலனைக் கருதுவதாலேயே இந்த இடர்ப்பாடு ஏற்படுகிறது. இத்தகைய உணர்ச்சியை அன்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/106&oldid=1122186" இலிருந்து மீள்விக்கப்பட்டது