பக்கம்:வாழ்க்கை.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
100
வாழ்க்கை
 

என்று சொல்ல முடியாது. அன்பின் முக்கியமான குணம் பிறருடைய நன்மைக்காகச் செயல்புரிதலே.

அன்பு செலுத்துவதில் வேற்றுமை காட்டி ஒரு வரைப் பார்க்கிலும் வேறு சிலரிடம் அன்பு செலுத்தல் உண்மையான அன்பாகாது. அது காய்க்காத காட்டுமரம் போன்றது. அதில் உண்மையான அன்பை ஒட்டுப் போட்டால் தான் கனிகள் உண்டாகும்.

அன்பில் பாரபட்சம் கிடையாது. அதில் வேற்றுமை பாராட்டினால், நன்மைக்குப் பதிலாகத் தீமையே விளையும். ஆகவே மனைவி, மக்கள், நண்பர்கள் முதலியோரிடமும், விஞ்ஞானம், கலை, தேசம் முதலியவைகளிடமும் அன்பு செலுத்துவதாகச் சொல்வது, மனிதர்கள் தங்கள் மிருக வாழ்க்கையில் அநுபவிக்க விரும்பும் இன்பங்களையே குறிக்கும்.

சுயநலனைத் துறத்தலின் விளைவே

அன்பு மனிதன் தன் மிருக இயல்பின் நலனைத் துறக்கும் போது தான் அன்பு ஏற்பட முடியும்.

தன் மிருக இயல்புக்குத் தனி நலன் இல்லை என்பதை மனிதன் அறிந்து கொள்ளும் போது தான், அன்பு அரும்ப ஆரம்பிக்கும். அப்போதுதான், ஒட்டுப் போட்ட செடி வளர்வதுபோல், உண்மையான அன்பு என்னும் கனியளிக்கும் செடி, மிருக இயல்பாகிய பழைய காட்டுச் செடியோடு ஒட்டிக்கொண்டு, அதன் ஜீவசக்தியை யெல்லாம் தான் பயன்படுத்திக்கொண்டு வளம் பெற்று வளரும்; வளர்ந்து கனிகளை அளிக்கும். கனி அளிக்காத கிளைகள் வெட்டித் தள்ளப்படும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/107&oldid=1122187" இருந்து மீள்விக்கப்பட்டது