பக்கம்:வாழ்க்கை.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
 

உண்மையான நன்மைகளா யிருப்பதில்லை. அவை இன்பத்தின் தோற்றங்களாகவே இருப்பதோடு, அவைகளைத் தொடர்ந்து துன்பங்கள் வந்து பெருகுகின்றன. இந்தத் துன்பங்களை அதிகமாக உணர்வதற்காக மட்டுமே சிறு சிறு துளிகளாக வரும் இன்பம் பயன்படுகின்றது. ஆராய்ச்சி அறிவும், அநுபவமும் மனிதனுக்கு இவ்விஷயங்களைப் புலப்படுத்துகின்றன. ஒருவன் வாழ்க்கையில் மேலே போகப் போக, இன்பங்கள் அருகிக்கொண்டே வருகின்றன ; களைப்பும் தெவிட்டுதலும் தோன்றுகின்றன ; கஷ்டங்களும் துன்பங்களும் பெருகிக்கொண்டே யிருக்கின்றன.

இவைமட்டுமல்ல, மூப்பு அதிகரிக்க ஆரம்பிக்கும்போது, மற்ற மனிதர்களின் நோய்களும், கிழப் பருவமும், மரணமும் மனிதன் கண்முன்பு தென்படுகின்றன. தனக்கும் அவையே கதி என்பதை அவன் அறிகிறான். ஒவ்வொரு கணமும் அவன் தன் வாழ்வு தேய்ந்துகொண்டே வருவதையும், ஒவ்வொரு கணத்திலும் தான் மூப்பு, தளர்ச்சி, மரணம் ஆகியவற்றை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதையும் தெரிந்து கொள்கிறான். அவனோடு போட்டியிடும் மற்ற ஜீவன்கள் ஆயிரக் கணக்கான சந்தர்ப்பங்களில் அவனுக்கு அபாயம் விளைக்கத் தயாராக இருக்கின்றன. துன்பங்களும் பெருகிக் கொண்டே வருகின்றன. இத்தனைக்கும் நடுவே வாழ்வு மரணத்தை நோக்கியே யாத்திரை செய்துகொண்டிருக்கிறது. இந்த யாத்திரையில் ஓய்வுமில்லை ; ஒழிவுமில்லை. மரணத்துடன் மனிதனுடைய தனி வாழ்வு முடிவுறும் ; மேற்கொண்டு தனி நன்மை எதுவுமேயில்லாத அழிவு நிலையே அவனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/11&oldid=1121501" இருந்து மீள்விக்கப்பட்டது