பக்கம்:வாழ்க்கை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

103


கொண்டிருப்பதை நாம் அறிகிறோம். ஆனால், சுயநலமான ஒவ்வோர் ஆசையையும் அடக்கி, ஒரு நிமிஷ நேரமாயினும் ஒருவன் அந்த வாக்கியத்தை உண்மையாகவே மனத்திற்கொண்டு சொல்லிப் பார்க்கட்டும். அவனுடைய சுயநலத் தியாகத்தின் அளவுக்குத் தக்கபடி வெகு வேகமாக மற்றவரிடமுள்ள வெறுப்பு மறைந்துவிடும். பிறகு, எல்லா மக்களிடமும் பரந்து நிறையும் அன்பு இதுவரை அடைபட்டிருந்த அவன் உள்ளத்திலே பெருக ஆரம்பிக்கும்.

உண்மையில், தன்னைப் பார்க்கினும் மற்றவர்களை விரும்புதலே அன்பு; இப்படித்தான் நாம் அன்புக்குப் பொருள் கொள்கிறோம்; வேறு பொருள் கொள்ளவும் முடியாது. நமது அன்பின் அளவு, நம் சொந்த நலனை எவ்வளவு தியாகம் செய்கிறோம் என்பதைப் பொறுத்தது. தியாக விஷயத்தைக் கவனியாமலே, உலகில் அன்பைக் கணக்கிட்டுக் கூறுவது வழக்கமாயிருக்கிறது.

தன்னலத் தியாகத்திலேயே அன்பு தளிர்விடுகிறது. பொதுவான அன்பிலிருந்தே குறிப்பிட்ட சில மனிதர்களிடத்தும், அந்நியர்களிடத்தும், நண்பர்களிடத்தும் அன்பு தோன்றுகிறது. இத்தகைய அன்புதான் வாழ்க்கையின் உண்மையான நலன் ; இதுவே மிருக உணர்ச்சிக்கும் பகுத்தறிவு உணர்ச்சிக்குமுள்ள முரண்பாட்டைத் தீர்மானிக்கிறது. ‘தான்’ என்ற எண்ணத்திலிருந்து பிறக்கும் தன்னலத் தியாகத்தைத் தியாகம் செய்வதிலிருந்து ஏற்படாத அன்பு, அதன் பயனாக எல்லா மக்களின் நலனையும் நாடாத அன்பு, மிருக வாழ்வைச் சேர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/110&oldid=1123834" இலிருந்து மீள்விக்கப்பட்டது